உலகக் கோப்பை 2022 போட்டிக்கு முன் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது ஆசியக் கோப்பை 2022 போட்டிகள் தான். ஒரு நாள் தொடர் வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை, இந்த ஆண்டு டி20 வடிவில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. உலகக்கோப்பை 2021க்கு பிறகு இரு அணிகளும் விளையாடும் இந்த போட்டியை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது பாகிஸ்தான். இதற்கு இந்திய அணி பழி தீர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
மேலும் படிக்க | INDvsPAK: மைதானத்திற்கு வந்த ஊர்வசி ரவுடேலா! வைரலாகும் ரிஷப் பந்தின் சிரிப்பு!
டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ் குமார் பந்துவீச்சில் பாகிஸ்தான அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ராகுல் முதல் பந்தியிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்றது.
WHAT. A. WIN!#TeamIndia clinch a thriller against Pakistan. Win by 5 wickets
Scorecard - https://t.co/o3hJ6VNfwF #INDvPAK #AsiaCup2022 pic.twitter.com/p4pLDi3y09
— BCCI (@BCCI) August 28, 2022
இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். பிசிசிஐ செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போட்டியை காண துபாய் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். ஜெய்ஷா வின் அருகில் இருக்கும் நபர் அவரிடம் தேசிய கொடியை கொடுக்கிறார், ஆனால் ஜெய்ஷா அதனை வாங்க மறுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே செயலை வேறொருவர் செய்திருந்தால் அவர்களை பாஜக ஆன்ட்டி இந்தியன் என்று அழைத்திருக்கும் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
If it was any non bjp leader who refused to hold the Indian Flag, the whole of BJP IT Wing would have called Anti National and the Godi Media would have day long debates on it ....
Luckily its Shahenshah's Son Jay Shah pic.twitter.com/zPZStr2I3D— krishanKTRS (@krishanKTRS) August 28, 2022
மேலும் படிக்க | அவுட்டா? நாட் அவுட்டா? முதல் போட்டியிலேயே எழுந்த சர்ச்சை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ