வாழ்வா சாவா போட்டியில் இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு - சிராஜ் அபாரம்!

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை எடுத்துள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 9, 2022, 05:35 PM IST
  • சிராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • தென்னாப்பிரிக்காவில் அதிகபட்சமாக மார்க்ரம் 79 ரன்களை குவித்தார்.
  • தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
வாழ்வா சாவா போட்டியில் இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு - சிராஜ் அபாரம்! title=

இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேசவ் மகராஜ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து, பவுமா, ஷம்ஸி ஆகியோருக்கு பதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ன் ஃபார்டுயின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு குவின்டன் டி காக், மாலன் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய டி காக் இம்முறை 5 ரன்களில் வெளியேறினார். சிறிதுநேரம் தாக்குபிடித்த மாலன் 25 ரன்களில் ஷாபாஸ் அகமது பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். 

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் ஐபிஎல் சம்பளம்! ஆனாலும் உலக கோப்பையில் இடம் இல்லை!

அதன்பின், ரீசா ஹென்ட்ரிக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் இந்திய அணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். இந்த ஜோடி, மூன்றாவது விக்கெட்டுக்கு 129 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, தலா 2 பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்ட கிளேசன் 30 ரன்களில் விரைவாக பெவிலியன் திரும்பினார். நிலைத்து நின்று ஆடிவந்த மார்க்ரம், 79 ரன்களை எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வீழ்ந்தார். 

தொடர்ந்து, டேவிட் மில்லர் சற்று ரன்களை குவிக்க, தென்னாப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை எடுத்தது. டேவிட் மில்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்திய அணி பந்துவீச்சு  சார்பில் சிராஜ்  விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆவேஷ் கான் மட்டும் விக்கெட்டை வீழ்த்தவில்லை. 

மேலும் படிக்க | இறந்தது டேவிட் மில்லரின் மகளா? உண்மை இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News