IND vs SA: நிரந்தர கேப்டன் ஆவாரா சூர்யகுமார்... தென்னாப்பிரிக்கா டி20 போட்டியை எப்படி பார்ப்பது?

IND vs SA T20 Live Telecast: இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், போட்டி எதில், எப்போது பார்ப்பது என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 10, 2023, 10:53 AM IST
  • டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார்.
  • விராட், ரோஹித், ராகுல் இடம்பெறவில்லை.
  • ஹர்திக் பாண்டியா காயத்தால் அவதிப்படுகிறார்.
IND vs SA: நிரந்தர கேப்டன் ஆவாரா சூர்யகுமார்... தென்னாப்பிரிக்கா டி20 போட்டியை எப்படி பார்ப்பது? title=

IND vs SA, When And Where To Watch Live: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி (IND vs SA) 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன. இந்நிலையில், முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் உள்ளது. ஜடேஜா துணை கேப்டனாக செயல்படுகிறார்.

சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி (Team India) சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. அந்த வகையில், தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். இந்திய டி20 அணியின் கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) காயத்தில் சிக்கியதை தொடர்ந்து, முன்னணி வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் கேப்டனாக்கப்பட்டார். 

அடுத்தாண்டு ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை (ICC T20 World Cup 2024) முன்னிட்டு இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோர் டி20 அணியில் கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் இடம்பெறவே இல்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும், இவர்கள் இந்திய அணியில் விளையாடாததற்கு முக்கிய காரணம், இளம் வீரர்களின் எழுச்சி எனலாம்.

மேலும் படிக்க | சிஎஸ்கே இந்த வேகப்பந்துவீச்சாளரை ஏலத்தில் எடுக்கணும்... டெத் ஓவரில் விக்கெட்டுகள் வரிசையாக விழும்!

IND vs SA: பிளேயிங் லெவனில் யார் யார்?

பவர்பிளே ஓவரில் ஜெய்ஸ்வால் காட்டும் அதிரடி, நங்கூரமாக நின்று ஆடும் ருதுராஜ், மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சை தாக்கும் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், திலக் வர்மா, பினிங்ஷிங்கிற்கு ரின்கு சிங், ஆல்-ரவுண்டராக ஜடேஜா, வேகப்பந்துவீச்சில் சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், சுழற்பந்துவீச்சில் ரவி பீஷ்னோய் என பிளேயிங் லெவன் வீரர்களும், பெஞ்ச் வீரர்களும் பக்காவாக இருக்க முன்னணி வீரர்களுக்கு டி20 அணியில் இடமில்லை.

அடுத்து இந்திய அணி ஆப்கானிஸ்தான் உடன் ஜனவரியில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்து உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அதன்பின் ஐபிஎல் தொடர். ஐபிஎல் முடிந்த உடனே ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கப் போவது யார் யார் என்பது இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணமும் உறுதிசெய்யும் எனலாம்.

IND vs SA T20: போட்டி எப்போது தொடங்கும்?

முதல் டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.  இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய தொடர் ஜியோ சினிமா தளத்திலும், ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் ஒளிபரப்பப்பட்ட நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் எதில் ஒளிபரப்பாகிறது என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

IND vs SA T20: போட்டி எதில் பார்ப்பது?

இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் ஒளிபரப்பப்படுகிறது. டி20 போட்டியின் டாஸ் மாலை 7 மணிக்கு போடப்படும், போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்கப்படும்.

இந்திய டி20 அணி

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

மேலும் படிக்க | விராட் கோலி இல்ல, யார் எனது அணி வீரர்களை சீண்டினாலும் பதிலடி கொடுப்பேன் - கவுதம் காம்பீர்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News