IND vs SL Asia Cup 2023 final: 2023 ஆசியக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் இலங்கையும் தகுதி பெற்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை (செப். 17) இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி இலங்கையின் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெற உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 கட்ட ஆட்டத்தில் இலங்கை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மழை குறுக்கிட்ட இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முகமது ரிஸ்வான் (86 நாட் அவுட்), இப்திகார் அகமது (47) அடிக்க பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பரபரப்பான இந்த போட்டியில் ஸ்ரீலங்கா கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | IND vs BAN: படுதோல்வி அடைந்த இந்தியா... புலியாக பாய்ந்தது பங்களாதேஷ்!
மறுபுறம், இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்திடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தாலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் சிரமப்பட்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ஷாகிப் அல் ஹசன் மற்றும் டவ்ஹித் ஹ்ரிடோய் இடையேயான 100-ரன்களின் பார்ட்னர்ஷிப் பங்களாதேஷ் இந்தியாவிற்கு 265 என்ற சவாலான ஸ்கோரை அமைக்க உதவியது. இந்திய அணியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்ததால் கடைசி கட்டத்தில் ரன்கள் அடிக்க ஆள் இல்லாமல் இந்தியா தடுமாறியது. இறுதியில் போட்டியில் தோல்வி அடைந்தது. இப்போது, 2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் சந்திக்க உள்ளன. இந்தியாவும் இலங்கையும் 166 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 166 ஆட்டங்களில் இந்தியா 97ல் வெற்றி பெற்றுள்ளது, இலங்கை 57 முறை வெற்றி பெற்றுள்ளது. 11 போட்டிகள் முடிவு இல்லாமல் முடிவடைந்தது. 1 போட்டி டையில் முடிந்தது.
IND vs SL ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டி: வானிலை அறிவிப்பு
இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், மாலையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படும். போட்டி தொடங்கும் நேரத்திலும், மாலையிலும் மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
இதுவரையிலான முக்கிய வீரர்களை நாம் பகுப்பாய்வு செய்தால், ஷுப்மான் கில் 275 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 253 ரன்களுடனும், சதீர சமரவிக்ரம 215 ரன்களுடனும் உள்ளனர். பந்துவீச்சில், பத்திரனா 11 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வெல்லலேஜ் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இரு அணிகளுக்கும் காய பிரச்சினைகள் உள்ளன. இலங்கையின் முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய அணியில் அக்சர் படேல் மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் காயத்தில் உள்ளனர்.
இந்திய பிளேயிங் 11 (தோராயமாக):
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா & முகமது சிராஜ்.
இந்திய பிளேயிங் 11 (தோராயமாக):
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (Wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (c), துனித் வெல்லலகே, துஷான் ஹேமந்த, மதீஷ பத்திரன & பிரமோத் மதுஷன்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு இந்த படை தான் தேவை... உத்தேச அணி ஒரு பார்வை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ