இந்திய அணியில் அதிரடி மாற்றம்... இந்த 3 வீரர்களுக்கு ஆப்பு வைக்கும் ரோஹித் - டிராவிட்!

India National Cricket Team: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அதில் மூன்று முக்கிய மாற்றங்களை ரோஹித் - டிராவிட் கூட்டணி செய்தாக வேண்டும். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 31, 2023, 01:37 PM IST
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜன.3ஆம் தேதி நடைபெறுகிறது.
  • ஜடேஜா அடுத்த போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது.
  • ஷர்துல் தாக்கூருக்கு அடுத்த போட்டியில் ஓய்வளிக்கப்படலாம்.
இந்திய அணியில் அதிரடி மாற்றம்... இந்த 3 வீரர்களுக்கு ஆப்பு வைக்கும் ரோஹித் - டிராவிட்! title=

India National Cricket Team: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு (IND vs SA Test Series) இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜன. 3ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. டர்பன் நகரில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியன் சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில், தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால் இந்திய அணியால் இனி தொடரை கைப்பற்ற இயலாது. எனினும் இந்த இரண்டாவது போட்டியை இந்திய அணி வெற்றி பெற்று சமன் செய்ய முயலும் எனலாம்.

ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி (Team India) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையிலும் 5ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது. இதன்பின், இங்கிலாந்து அணியுடன் இந்திய மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்தான் இந்திய அணி விளையாட உள்ளது. அதன்பின், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகிய டி20 தொடர்கள் வரிசைக்கட்டி நிற்பதால் இந்திய அணி, தரவரிசையில் மேலும் பின்தங்காமல் இருக்க இந்த தொடரை சமன் செய்ய வேண்டும். உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி (Virat Kohli), ஜஸ்பிரித் பும்ரா ஆகிய முன்னணி வீரர்களும் தற்போதுதான் அணிக்கு திரும்பியிருப்பதால், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்றால்தான் அவர்களுக்கும் புத்துணர்ச்சி ஏற்படும் எனலாம்.

இப்படி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி (IND vs SA 2nd Test) இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் நிலையில், அதில் மூன்று முக்கிய மாற்றங்களையும் ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி செய்தாக வேண்டும். முதுகு பிடிப்பு காரணமாக முதல் போட்டியை தவறவிட்ட ஜடேஜா (Jadeja) இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என தெரிகிறது. அந்த வகையில், இந்த முக்கிய மாற்றங்களை இந்தியா சேர்த்தாக வேண்டும்.

மேலும் படிக்க | இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயம்... தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வழி இதுதான்!

அஸ்வின் அவுட்

அஸ்வின் (Ashwin) உலகத்தரமிக்க சுழற்பந்துவீச்சாளர் என்பது மறுக்க முடியாததுதான். இருப்பினும், தென்னாப்பிரிக்க ஆடுகளம் என்பது சுழலுக்கு பெரிதாக சாதகமாக இருக்காது. இதில் ஜடேஜா ஏன் இவருக்கு மாற்றாக அமைகிறார் என்றால் அவரிடம் இருக்கும் கூடுதல் பேட்டிங் ஆப்ஷன் எனலாம். எனவே, காயத்தில் இருந்து மீளும்பட்சத்தில் ஜடேஜா நேரடியாக பிளேயிங் லெவனில் வருவார், ஏன் கேஎல் ராகுலுக்கு முன்னர் இறங்கியும் பேட்டிங் செய்யும் திறனுடையவர் ஜடேஜா.

டெஸ்டிலும் முகேஷ் குமார்

இந்திய அணியில் பேட்டிங் டெப்திற்காக 8ஆவது இடத்திலும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் விளையாட வேண்டும் என்பது தேர்வுக்குழுவின் விருப்பம். அதன்பேரில்தான், ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) அந்த முக்கியத்துவம் வாயந்த் 8ஆவது இடத்தை நிரப்புகிறார். ஆனால், அவரின் பந்துவீச்சு என்பது இந்திய அணிக்கு பெரியளவில் கைக்கொடுக்கவில்லை என்பது கடந்த போட்டியிலேயே பார்க்க முடிந்தது. பும்ரா - சிராஜ் ஆகியோர் ஏற்படுத்தி வந்த அழுத்தத்தை ஷர்துல் சில இடங்களில் நீர்த்துப்போகச் செய்ததை பார்க்க முடிந்தது. அவர் சரியான லைனிலும் வீச முடியாமல் திண்டாடினார். எனவே, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வரும் முகேஷ் குமாரை டெஸ்டிலும் முயற்சித்து பார்க்கலாம். 

அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் 

ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தபோது, மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Eashwaran) இந்திய அணியில் இணைந்தார். அவர் இந்திய ஏ அணிக்காக தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் வந்திருந்தார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக மிடில் ஆர்டருக்கு சர்ஃபராஸ் கான் கொண்டு வரப்படுவார் என கூறப்பட்ட நிலையில், அபிமன்யூவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அபிமன்யூ ஈஸ்வரனுக்கு முதல் தர போட்டிகளில் நல்ல அனுபவம் இருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) அல்லது சுப்மான் கில்லுக்கு (Shubman Gill) பதிலாக இவரை முயற்சித்து பார்க்கலாம். ஒருவேளை ஷ்ரேயாஸிற்கு பதில் இவரை முயற்சித்தால், கில் நம்பர் 5 இடத்திற்கு தள்ளப்பட்டு, அபிமன்யூ ஒன்-டவுணில் விளையாடலாம். 

மேலும் படிக்க | ஊசிப்போட்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஷமி... அதிரவைக்கும் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News