INDvAFG: முதல் இன்னிங்ஸ்! இந்தியா 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

Last Updated : Jun 15, 2018, 12:06 PM IST
INDvAFG: முதல் இன்னிங்ஸ்! இந்தியா 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது! title=

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணி 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் 105(153) மற்றும் ஷிகர் தவான் 107(96) பலமான அஸ்திவாரத்தினை ஏற்படுத்தினர். இவர்களையடுத்து களமிறங்கிய ராகுல் 54(64) ரன்களில் வெளியேறினார். எனினும் பிறகு வந்த வீரர்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதனால் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் குவித்துள்ளது. 

2-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும், அஷ்வின் 18 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 20 ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம் பாண்ட்யா அதிரடி ஆட்டம் ஆடினார். ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களில் வெளியேறினார். 

இந்நிலையில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 104.5 ஓவர்களில் 474 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய உள்ளது. 

Trending News