மயங்க் அகர்வாலின் சதத்தால் தப்பித்த இந்திய அணி!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது  

Written by - RK Spark | Last Updated : Dec 3, 2021, 06:03 PM IST
மயங்க் அகர்வாலின் சதத்தால் தப்பித்த இந்திய அணி! title=

நியூஸிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் தொடங்கியது.  முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத கோலி இந்த போட்டியில் களம் இறங்கினார்.  கோலிக்கு பதிலாக யாரை அணியில் இருந்து நீக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜடேஜா, ரஹானே, இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணாமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினர்.  அவர்களுக்கு பதிலாக சிராஜ்,  ஜெயண்ட் யாதவ் அணியில் இடம் பெற்றனர்.  நியூஸிலாந்து அணியில் வில்லியம்சன் காயம் காரணமாக விலகினார்.  அவருக்கு பதிலாக டாம் லாதம் கேப்டனாக களம் இறங்கினார்.

virat

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  பிட்ச் ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கபட்டது.  அதன் பின் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி ஆரம்பம் ஆனது.  இந்திய அணியின் ஓப்பனிங் பேஸ்ட்மேன்கள் சிறப்பாக விளையாடி வந்தனர்.  முதல் விக்கெட்க்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் கில் 44 ரன்களுக்கு வெளியேறினார்.  அதன்பின் வந்த புஜாரா மற்றும் கோலி அடுத்தடுத்து 0 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.  முதல் டெஸ்டில் கலக்கிய ஷ்ரேயஸ் 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

 

அஜாஸ் படேல் இந்திய அணியின் முதல் 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்.  மறுபுறம் சிறப்பாக விளையாடிய மயங்க அகர்வால் சதம் அடித்தார்.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்தது.  மயங்க் 120 ரங்களுடனும், சஹா 25 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.  நாளை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கும் பட்சத்தில் முதல் இன்னிங்சில் நல்ல ஸ்கோர்ரை எட்ட முடியும்.

 

ALSO READ ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டன் யார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News