INDVsPAK: இந்திய அணிக்கே அதிக சான்ஸ் ! பச்சி சொல்லல டேட்டா சொல்லுது

கொழும்பு மைதானத்தில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக டேட்டா சொல்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 10, 2023, 02:43 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் மோதல்
  • கொழும்பு மைதானம் ஒரு பார்வை
  • இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு
INDVsPAK: இந்திய அணிக்கே அதிக சான்ஸ் ! பச்சி சொல்லல டேட்டா சொல்லுது title=

இலங்கையில் இருக்கும் பிரபலமான மைதானமான பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 35000 இருக்கைகள் இருக்கின்றன. கொழும்பில் உள்ள இந்த மைதானம் 200-க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ளது. பல பெருமைகளைக் கொண்டிருக்கும் இந்த மைதானத்தில் இந்தியா பல போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதிகபட்ச ரன்கள் அடித்த அணியாகவும் இந்தியா இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆர். பிரேமதாச மைதானம் போட்டிகள் விவரம்

பிரேமதாச மைதானத்தில் இதுவரை மொத்தம் 140 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதல் ஒருநாள் போட்டி 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி நியூசிலாந்து இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்தபோது நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அணி 79 முறையும், சேசிங் அணி 53 முறையும் வெற்றி பெற்றுள்ளது. "நோ ரிசல்ட்" என 8 போட்டிகள் அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க | IND vs PAK: மீண்டும் இந்தியா முதல் பேட்டிங்... பிளேயிங் லெவனில் யார் யார் தெரியுமா?

ஆர் பிரேமதாச ஸ்டேடியம், கொழும்பு: பிட்ச் ரிப்போர்ட்

கடந்த கால சாதனைகளை கருத்தில் கொண்டு ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளத்தில் சொர்க்க பூமி. மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ஆகும். மேலும் சேஸிங் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்குமே மிடில் ஓவர்கள் முக்கியமானதாக இருக்கும். இதுதான் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

அதிகபட்ச ஸ்கோர் என்ன?

2017-ல் இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, இந்த மைதானத்தில் விளையாடிய போட்டியில் 375/5 ரன்களை எடுத்தது. இதுதான் இந்த மைதானத்தில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர். ரோஹித் சர்மா (104) மற்றும் விராட் கோலி (131) இருவரும் சதம் அடித்தனர். அதே நேரத்தில் MS தோனி (49*) மற்றும் மணீஷ் பாண்டே (50*) ரன்கள் எடுத்தனர்.

குறைந்த ஸ்கோர்?

R. பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்தின் 86 ரன்கள் எடுத்தே இந்த பிட்சில் எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோர். 

ஆர் பிரேமதாச மைதானத்தில் அதிக தனிநபர் ஸ்கோர் என்ன?

ஆர் பிரேமதாச மைதானத்தில் ஒருநாள் போட்டியில் 169 (137 பந்துகள்) ரன்களை குவித்ததன் மூலம் குமார சங்கக்கார, ஒரு நாள் போட்டியில் அதிக தனிநபர் ஸ்கோரை அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் சதம் அடித்தார். சங்கக்காரா தனது இன்னிங்ஸில் 18 பவுண்டரிகள் விளாசினார். அவரது சதத்தால் இலங்கை அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆர் பிரேமதாச மைதானத்தில் அடிக்கப்பட்ட சதங்கள்

ஒருநாள் போட்டிகளில் இந்த மைதானத்தில் 52 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆகியோர் ஆர் பிரேமதாசா மைதானத்தில் அதிக சதங்கள் அடித்தவர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். இருவரும் தலா 4. விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த மைதானத்தில் மூன்று முறை சதங்களை அடித்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

சிறந்த பந்துவீச்சாளர் யார்?

2009ல் இந்தியாவுக்கு எதிராக ஏஞ்சலோ மேத்யூஸ் 6 ஓவர்களில் 6/20 எடுத்ததே ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் சிறந்த பந்துவீச்சாக இருக்கிறது. இதே மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் உள்ளார். இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் 75 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

மேலும் படிக்க | IND vs PAK: இஷான் கிஷனா? கேஎல் ராகுலா? இந்திய அணியில் விளையாடப்போவது யார்?

அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் யார்?

ஒருநாள் அரங்கில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார். அவர் 70 இன்னிங்ஸ்களில் 2514 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 130 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சக வீரர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் முறையே 2156 மற்றும் 1712  ரன்களும் எடுத்துள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News