இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ்தான் காரணம் - புஜாரா

தனது அதிரடி ஆட்ட அணுகுமுறைக்கு காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.   

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 17, 2022, 07:30 PM IST
  • புஜாரா கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடிவருகிறார்
  • அதிரடியாகவும் விளையாடினார் புஜாரா
  • அதிரடிக்கு காரணம் சிஎஸ்கேதான் என பேசியிருக்கிறார்
இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ்தான் காரணம் - புஜாரா title=

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாக இருக்கும். களத்தில் நிலைத்து நின்று சூழலுக்கு தகுந்தவாறு தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன். இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இவர்தான் இந்தியாவின் அடுத்த பெருஞ்சுவர் என வர்ணித்துள்ளனர். தற்போது அவர், நடப்பு ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் மொத்தம் 624 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 

சசெக்ஸ் அணிக்காக இந்தத் தொடரில் அவர் விளையாடி இருந்தார். இங்கிலாந்தில் உள்ள முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறும் தொடர் இது. இந்த தொடரில் 3 சதம் மற்றும் இரண்டு அரை சதம் பதிவு செய்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 111.62 ஆகும். எப்போது நிதானமான பேட்ஸ்மேன் என்று கருதப்படும் புஜாராவின் இந்த அதிரடி ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Pujara

இதுகுறித்து அவர் கூறுகையில், “நிச்சயம் எனது ஆட்டத்தின் மற்றொரு பக்கம் இது என சொல்லலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் விளையாடியது அற்புதமான ஆடுகளங்கள். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடலாம். அதில் நான் கொஞ்சம் கவனம் செலுத்தி பயிற்சி எடுத்துக் கொண்டேன். 2021 சீசனில் நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்ததை இதற்கு காரணம் என சொல்லலாம்.

மேலும் படிக்க | வீரர்களுக்கு குடும்பம் இருக்கிறது..! ரோஹித் மற்றும் டிராவிட்டிற்கு ஜடேஜா எச்சரிக்கை!

அந்த சீசனில் நான் ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த அணி வீரர்கள் போட்டிக்கு தயாராகும் முறையை கவனித்தேன். அப்போது ஒரு முடிவு செய்தேன். அது எனது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்தியது. நான் சில ஷாட்களில் பயிற்சி மேற்கொண்டேன். அதனை சிறப்பாக விளையாடுவதாக நண்பர் ஒருவர் ஊக்கம் கொடுத்தார். பயிற்சியில் செய்ததை களத்திலும் செய்தேன்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News