IPL 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் விவரம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் சீசனுக்கு முன்னதாக IPL T20 போட்டியில் விளையாடும் முழு அட்டவணையை வெளியிடுகிறது!!

Last Updated : Feb 16, 2020, 11:08 AM IST
IPL 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் விவரம்... title=

சென்னை சூப்பர் கிங்ஸ் சீசனுக்கு முன்னதாக IPL T20 போட்டியில் விளையாடும் முழு அட்டவணையை வெளியிடுகிறது!!

இந்தாண்டுக்கான IPL T20 போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் மார்ச் 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், அந்த இரு அணிகளும் தற்போது முதல் போட்டியில் களமிறங்க உள்ளன. அதன் பிறகு, ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 6 ஆம் தேதி கொல்கத்தா அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது. இதை தொடர்ந்து, ஏப்ரல் 11 ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் உடன் விளையாடும் சென்னை அணி, ஏப்ரல் 13 ஆம் தேதி டெல்லியுடன் மோதவுள்ளது.

இதையடுத்து,  ஏப்ரல் 17 கிங்ஸ்லெவல் பஞ்சாப்அணியுடம் மோத உள்ளது. சன்ரைசர்ஸ் அணியுடன் ஏப்ரல் 19 ஆம் தேதியும், ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் விளையாடுகிறது சென்னை அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடன் ஏப்ரல் 27 ஆம் தேதி மோதும் சென்னை அணி, ஏப்ரல் 30 ஆம் தேதி மீண்டும் ஐதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. அதன்பிறகு மே 4 ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், மே 7ஆம் தேதி கொல்கத்தா அணியுடனும் மோதும் சென்னை அணி, மே 10 ஆம் தேதி டெல்லி அணியுடன் விளையாடிய பின்னர், மே 14 ஆம் தேதி பெங்களூரு அணியுடன் மீண்டும் மோதவுள்ளது. இறுதிப் போட்டி மே 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News