ஐபிஎல் 2017: புனே தனது பிளே-ஆஃப் சுற்று தகுதியை உறுதி செய்யுமா?

Last Updated : May 13, 2017, 02:39 PM IST
ஐபிஎல் 2017: புனே தனது பிளே-ஆஃப் சுற்று தகுதியை உறுதி செய்யுமா? title=

இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. 

டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளது. இந்த தொடரில் இளம் இந்திய வீரர்களை கொண்டுள்ளதாக டெல்லி அணி இருக்கிறது. டெல்லி அணியின் ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலத்தை இந்த தொடர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

ஸ்டீவ் ஸ்மித் தலையிலான புனே அணி 12 ஆட்டத்தில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் புனே அணி வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். 

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டி சோனி சிக்ஸ், சோனி பிக்ஸ் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

டெல்லி டேர்டேவில்ஸ்: 

ஜாகீர் கான் (கேப்டன்), முகமது ஷமி, சபாஷ் நதீம், ஸ்ரேயஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், அமித் மிஸ்ரா, கார்லோஸ் பிராத் வெயிட், ஷமா மிலிந்த், கிறிஸ் மோரிஸ், கருண் நாயர், பிரதியுஷ் சிங், ரிஷப் பந்த், சாம் பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், ஆதித்யா தாரே, சயத் ஹலீத் அகமது, கோரே ஆண்டர்சன், மேத்யூஸ், ரபாடா, முருகன் அஸ்வின், பாட் கம்மின்ஸ், நவ்தீப் ஷைனி, அங்கீத் பாவ்னே, ஷசாங்க் சிங்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ் ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க்அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல்திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

Trending News