IPL 2021: வருணின் சுழலில் சுருண்ட ஆர்சிபி!

ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2021, 10:38 PM IST
IPL 2021: வருணின் சுழலில் சுருண்ட ஆர்சிபி!  title=

ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் நேற்று முதல் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  போட்டியின் 31-வது ஆட்டம் இன்று கொல்கத்தா அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது.  முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது.  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது மிகப் பெரிய தவறு என்று நினைக்கும் வகையில் ஆர்சிபியின் பேட்டிங் அமைந்தது. 

இந்த வருட ஐபிஎல் போட்டியுடன் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று கோலி அறிவித்ததிலிருந்து இன்றைய போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமானது.  அந்தவகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 5 ரன்களுக்கு வெளியேறினார்.  அடுத்து டேவிட் படிக்கல், பாரத், மேக்ஸ்வெல் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது.  டிவில்லியர்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே ரசலின் பந்தில் போல்டாகி வெளியேறினார். 

varun

மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி சூழலில் சச்சின் பேபி மற்றும் ஹசரங்கா அடுத்தடுத்து வெளியேறினர்.  அதன்பின் தொடர்ந்து விக்கெட்டுக்கள் வில 19 ஓவரிலேயே 92  ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆர்சிபி.  எளிய இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பத்து ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது.  சுப்மன் கில், 41 ரன்களும் வெங்கடேச ஐயர் 41 ரன்களும் அடித்தனர்.   இந்தப் போட்டியில் சுவாரசியம் என்னவென்றால் கடந்த வருடம் ஐக்கிய அமீரகத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஒவரில் 84 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.  ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து அந்த போட்டியில் வெற்றி பெற்றது. 

kkr

கொல்கத்தா அணியின் ஆர்சிபிக்கு எதிரான சாதனைகள்

  1. இரண்டாவது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் பிரண்டன் மெக்கலம் 158* 
  2. ஐபிஎல் இல் குறைந்தபட்ச ஸ்கோர் ஆர்சிபி 49/ All out  
  3. ஐபிஎல்லில் 2-வது அதிவேக அரைசதம் சுனில் நரேன் (15 பந்துகள் )
  4. ஐபிஎல்லில் ஒரு இன்னிங்சில் அதிக பட்ச பவர் பிளே ஸ்கோர் - 105  
  5. ஐபிஎல் இல் கேகேஆர் செய்த அதிகபட்ச சேசிங் 206 vs RCB, 2019

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News