சென்னை: இன்னும் மூன்று சீசன்களுக்கு எம்எஸ் தோனியை அணியில் வைத்துக் கொள்ள முடிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பந்தத்தை இறுதி செய்தது. எந்த கிரிக்கெட்டர் எந்த அணியில் இருப்பார்? இதோ...
மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை தக்கவைத்துக்கொள்வதாகவும், மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டும் மும்பை அணியில் இணையலாம் என்றும் தெரிகிறது.
ஜனவரி 2022 இல் மெகா ஏலம் நடக்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஐபிஎல் வீரர்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய திருப்பமாக, நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டி20 லீக்கின் அடுத்த மூன்று சீசன்களுக்கு தங்கள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேறு சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளது. 2021 ஐபிஎல் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்கவைக்கவும் முடிவெடுத்துள்ளது.
Happy Smi7es when Thala was in town! Moments from the weekend sponsor meet! #WhistlePodu #Yellove @myntra @TVSEurogrip pic.twitter.com/b39LfA9aA9
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) November 24, 2021
பிசிசிஐ (BCCI) விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலியுடனை அணியில் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மெதுவான மற்றும் திருப்புமுனையில் அலி ஒரு பயனுள்ள வீரராக இருக்கலாம், இருப்பினும், அவருடனான பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், CSK மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் குரானை நான்காவது வீரராக தக்க வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.
முன்னதாக, தனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் தான் என்பதை தோனி (Mahendra Singh Dhoni) உறுதிப்படுத்தியிருந்தார். “எனது கிரிக்கெட்டை நான் எப்போதும் திட்டமிட்டுள்ளேன். இந்தியாவில் எனது கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடந்தது. என்னுடைய கடைசி டி20 சென்னையில் நடக்கும் என்று நம்புகிறேன். இது அடுத்த வருடமா அல்லது ஐந்து வருடங்களிலா என்று எனக்குத் தெரியாது” என்று தோனி சமீபத்திய சிஎஸ்கே நிகழ்வில் கூறியது நினைவிருக்கலாம்.
ALSO READ | கேப்டன் பதவியில் இருந்து விலகியவுடன் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய விராட் கோலி
நவம்பர் 30 ஆம் தேதிக்குள் உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு 2022 சீசனில் இருந்து இரண்டு புதிய அணிகள் லீக்கில் இணைவதன் மூலம் மெகா ஏலம் நடைபெறும். இதற்கிடையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், பிரித்வி ஷா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரை தக்கவைக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை தக்கவைத்துக்கொள்வதாகவும், அவர்கள் மேற்கிந்திய தீவுகளின் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. ஐந்து முறை சாம்பியனான மும்பை அணி, சூர்யகுமார் யாதவை விட விரும்பவில்லை, என்பதால் அவரை ஏலத்தின் மூலம் தங்கள் அணியில் வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் 2022 தொடரில் பத்து அணிகள் இருக்கும். இரண்டு புதிய அணிகளின் உரிமையாளர்களான சஞ்சீவ் கோயங்காவின் RPSG குழு மற்றும் CVC கேபிடல்ஸ், சில சிறந்த இந்திய வீரர்களை அணுகியுள்ளன. இந்திய தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸிலிருந்து பிரிந்து புதிய லக்னோ அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது இரண்டு ஆல்-ரவுண்டர்களான சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆகியோரையும் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இருப்பினும், ஷுப்மான் கில் அல்லது வெங்கடேஷ் ஐயரை தக்கவைப்பது குறித்து கொல்கத்தா அணி இன்னும் முடிவு செய்யவில்லை
மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி அல்லது சாம் குர்ரான்.
டெல்லி கேபிடலஸ்: ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) : ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல்.
(IANS வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது)
READ ALSO | யார்க்கர் King நடராஜன் தமிழ்நாடு அணியிலிருந்து நீக்கம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR