ஐபிஎல் ஊடக உரிமை 2022: திறமையான மற்றும் வெளிப்படையான மின்-ஏலத்திற்காக BCCI-க்கு ZEEL குழுமம் வாழ்த்து!

தொலைக்காட்சி உரிமைகள் மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்கான ஊடக உரிமை ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.48,390 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jun 14, 2022, 09:43 PM IST
  • ஏலம் மூலம் பிசிசிஐக்கு ரூ.48,390 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
  • டிஜிட்டல் உரிமையை Viacom18 நிறுவனம் 20,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
  • ஒரு போட்டிக்கு 50 கோடிகள் என்ற விலைக்கு வாங்கி உள்ளது.
ஐபிஎல் ஊடக உரிமை 2022: திறமையான மற்றும் வெளிப்படையான மின்-ஏலத்திற்காக BCCI-க்கு ZEEL குழுமம்  வாழ்த்து! title=

ஐபிஎல் ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலத்தின் முடிவுகளை BCCI செயலாளர் ஜெய் ஷா அறிவித்த பிறகு, ZEE என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம், மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான மின்-ஏலச் செயல்முறையை நடத்தியதற்காக பிசிசிஐ-யை வாழ்த்தியது. "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (BCCI) மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான மின்-ஏல செயல்முறையை நடத்துவதற்கு ZEE வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறது. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருண் துமால் ஆகியோருக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

 

மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளரான VVS லக்ஷ்மண்!

ZEE-ல், எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் மதிப்பு உருவாக்கம் என்ற ப்ரிஸம் மூலம் அனைத்து வணிக முடிவுகளையும் நாங்கள் மதிப்பீடு செய்கிறோம், மேலும் ஒவ்வொரு விளையாட்டுச் சொத்தையும் ஒரே ப்ரிஸத்துடன் தொடர்ந்து மதிப்பீடு செய்வோம்,” என்று ZEE என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் வணிகத்தின் தலைவர் திரு ராகுல் ஜோஹ்ரி கூறினார்.

ஐபிஎல் இந்திய துணைக் கண்ட தொலைக்காட்சி உரிமையானது டிஸ்னி ஸ்டார் நிறுவனத்திற்கு ரூ. 23,575 கோடிக்கு சென்றது என்பதை இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியது. ஐபிஎல் ஊடக உரிமை ஏலத்தில் டிஜிட்டல் உரிமையை Viacom18 நிறுவனம் 20,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.ஊடக உரிமை ஏலத்தின் மூலம் பிசிசிஐக்கு ரூ.48,390 கோடி வருவாய் கிடைத்துள்ளது. டிஸ்னி ஸ்டார் பேக்கேஜ் A (Legacy Media Rights) ஐ ஒரு கேமிற்கு திறம்பட ரூ.57.5 கோடி என்ற விலையில் பெற்றுள்ளது. வயாகாம் 18 தொகுப்பு B (டிஜிட்டல் உரிமைகள்) க்கு ஒரு போட்டிக்கு 50 கோடிகள் என்ற விலைக்கு வாங்கி உள்ளது.

மேலும் படிக்க | ஐபிஎல்-ல் ஒரு போட்டியின் மதிப்பு இத்தனை கோடியா? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News