இந்த ஆண்டு IPL நடைபெறுமா? Rajasthan Royals உரிமையாளர் பகீர் தகவல்!

IPL மீண்டும் நடத்த முடியுமா என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில், IPL 2021 ஐ மீண்டும் திட்டமிடுவது உண்மையான சவாலாக இருக்கும் என்று Rajasthan Royals உரிமையாளர் Manoj Badale தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2021, 06:14 AM IST
இந்த ஆண்டு IPL நடைபெறுமா? Rajasthan Royals உரிமையாளர் பகீர் தகவல்! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் ஐபிஎல் 2021 ஒத்திவைக்கப்பட்டது. இந்த லீக்கில், வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து இந்த தொற்றுநோய்க்கு ஆளாகி வந்தனர், அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது ஐ.பி.எல் மீண்டும் நடத்த முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.

இதற்கிடையில், ஒத்தி வைக்கப்பட்ட IPL 2021 ஐ மீண்டும் நடத்துவது என்பது உண்மையான சவாலாக இருக்கும் என்றும் இது இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ நடைபெற வாய்ப்புள்ளது என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) உரிமையாளர் மனோஜ் படலே தெரிவித்தார். ஐபிஎல்லின் உயிர்-பாதுகாப்பான சூழலில் கோவிட் -19 க்கு சில வீரர்கள் பாசிட்டிவ் ஆக காணப்பட்டதை அடுத்து டி 20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ | IPL 2021: CSK அணியின் உருக்கமான வீடியோ, சோகத்தில் ரசிகர்கள்!

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தனது அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டியிருப்பதால் லீக் மீண்டும் தொடங்கியவுடன் தனது சிறந்த வீரர்களால் அதில் விளையாட முடியாது என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) கிரிக்கெட் இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இது மட்டுமல்லாமல், அவர்கள் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளனர். 

லீக் பிரிட்டன் அல்லது மத்திய கிழக்கில் நடைபெற வாய்ப்புள்ளது என்று Manoj Badale கூறினார். மேலும் 'இது ஒரு உண்மையான சவால் என்று நான் நினைக்கிறேன். செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து அல்லது டி 20 உலகக் கோப்பைக்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ லீக் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இது ஒரு உண்மையான சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்' எதிரு அவர் கூறினார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News