IPL 2023: ஜோ ரூட் நடந்துகொண்டிருக்கும் கவுண்டி சீசனை விளையாடாமல், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி முகாமில் இருக்கிறார். இவர் தனது முதல் ஐபிஎல் போட்டியை விளையாட தவமாய் தவமிருக்கிறார்.
ரூட்டின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதால், முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் இந்தியாவில் தனது நேரத்தை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது. யுஸ்வேந்திர சாஹலுடனான அவரது நடன அசைவுகளும் மிகவும் பிரபலமடைந்தன.
ராஜஸ்தான் அணி இப்போது ரூட், தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரிடம் சில சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி, அதற்கு அவர்கள் பதிலளிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர்கள் விளையாட விரும்பும் கேப்டனைத் தேர்வு செய்யும்படி அவர்களிடம் கேள்வியெழுப்பப்பட்டது. தோனி மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் தொகுப்பாளரால் வழங்கப்பட்டன.
Finally asked Joe that last question#IPL2023 | @FinoPaymntsBank pic.twitter.com/ORx0O7r4fO
— Rajasthan Royals (@rajasthanroyals) May 4, 2023
மேலும் படிக்க | இனி மேல் தோனி கிட்ட அப்படி கேட்காதீங்க.. - ஷேவாக் ஆவேசம்
ஜூரல் மற்றும் படிக்கல் இருவரும் தோனியின் பக்கம் சென்றனர். சில வினாடிகள் தாமதத்திற்குப் பிறகு, ரூட் தோனியைத் தேர்ந்தெடுத்தார். ரூட், ராஜஸ்தான் அணியின் ஒரு பகுதியாக உள்ளார், மேலும், ரூட் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் போது அவர் சஞ்சு சாம்சன் கீழ் விளையாடுவார். அவர் தொடர்ந்து இம்பாக்ட் பிளேயர்ஸ் பட்டியலில் இடம்பெறுவார். ஆனால் இன்னும் அவர் ஒரு போட்டியில் கூட களம் இறங்கவில்லை.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ரூட்டுக்கு இந்திய ஜாம்பவான் கீழ் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ரூட்டின் டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் கீழ் விளையாடி வருகிறார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நான்கு நாள் டெஸ்ட் போட்டியை அயர்லாந்தில் இங்கிலாந்து நடத்த உள்ளது. மேலும் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
முதல் ஐபிஎல் தொடரான 2008இல் சாம்பியன் அணியான ராஜஸ்தான் அதன்பிறகு கோப்பை கைப்பற்றவில்லை. கடந்த ஆண்டு, ராஜஸ்தான் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. இத்தொடரின், புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் ராஜஸ்தான் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ