SRH vs MI ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வது யார்? இன்றைய போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்?

Today IPL Match Prediction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2023: இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? இன்றைய போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்? முழு விவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2023, 02:20 PM IST
  • இன்றைய 25வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதல்.
  • ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் எட்டாவது இடத்தில் உள்ளது.
  • ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
SRH vs MI ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வது யார்? இன்றைய போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்? title=

Sunrisers Hyderabad Vs Mumbai Indians: டாடா ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய (ஏப்ரல் 18, செவ்வாய்) 25வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களின் முந்தைய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே இன்றைய போட்டியை வெல்வதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய இருஅணிகளும் வியூகம் வகுக்கும். இதன் காரணமாக இன்றைய ஐபிஎல் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வது யார்?
நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக தொடர்ச்சியான தோல்விகளுடன் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை அடுத்தடுத்து ஆட்டங்களில் தோற்கடித்தது. மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தோல்வியடைந்தது. ஆனால் அதன் பிறகு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டிகளை வென்றது. 

ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியல்:
ஐபிஎல் 2023 புள்ளிகள் பட்டியலில் தற்போதைய நிலைகளின்படி, மும்பை இந்தியன்ஸ் எட்டாவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடி ய்ல்லது. அதில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.எனவே, இரு அணிகளும் வரவிருக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தங்கள் அணியின் இடத்தை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டும்.

மேலும் படிக்க: ஓவரா கொண்டாடாதீங்க விராட் கோலி - 10% பைன் போட்ட பிசிசிஐ: இதுதான் காரணம்..!!

இன்றைய போட்டி விவரங்கள்:
இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நேரலை ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

>> போட்டி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்
>> தேதி: 18 ஏப்ரல் 2023
>> இடம்: ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கம், ஹைதராபாத்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஹாரி புரூக் 100 ரன்களும், எய்டன் மார்க்ரம் 50 ரன்களும் எடுத்தனர். மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இஷான் கிஷன் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 43 ரன்களும் எடுத்தனர்.

ஹைதராபாத் vs மும்பை நேருக்கு நேர் ஆட்டத்தின் நிலவரம்:
இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் ஒன்றுக்கொன்று எதிராக 19 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 போட்டிகளிலும், மீதமுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

>> நேருக்கு நேர் மோதிய ஆட்டங்கள் - 19
>> சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி எண்ணிக்கை - 9 
>> மும்பை இந்தியன்ஸ் வெற்றி எண்ணிக்கை - 10

மேலும் படிக்க: IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தின் புள்ளி விவரங்கள்: 
ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் வரலாற்று ரீதியாக அதிக ஸ்கோர் அடிக்கும் ஆடுகளமாக உள்ளது. இந்த மைதானத்தில் சேஸிங் அணி அதிக வெற்றியை பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும். ஏனெனில் இந்த மைதானத்தில் ஒரு நல்ல ஸ்கோரை கணிப்பது கடினம். அதற்கு காரணம் பந்துவீசுபவர்களுக்கும் இந்த மைதானம் ஏற்றதாக இருக்கும். அதுவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்த அளவு உதவியாக இருக்கும்.

ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர்:
இந்த விக்கெட்டில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 170 ரன்கள் ஆக உள்ளது.

சேஸிங் அணிகளின் நிலவரம்:
இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி இங்கு சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. இந்த மைதானத்தில் 60 சதவீத வெற்றியை தக்கவைத்துள்ளனர்.

மேலும் படிக்க: கடைசி பந்து வரை ட்விஸ்ட்! பெங்களூரில் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

இன்றைய ஆட்டத்தில் இந்த 11 வீரர்கள் விளையாடக்கூடும் (கணிப்பு)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்): ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ): இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்

மேலும் படிக்க: IPL 2023: கொல்கத்தாவை இந்த முறை காக்க தவறினார் ரிங்கு சிங்... ஹைதராபாத் வெற்றி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News