Captain Of IPL: ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள்! தோனி இல்லையா?

Successful Captain: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை விட பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டன்களில் சிறந்த வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 26, 2023, 01:24 PM IST
  • தோனியை விஞ்சும் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா
  • ஐபிஎல் தொடரில் கேப்டன்களில் சிறந்த வெற்றி விகிதத்தைப் பெற்ற ஹர்திக் பாண்ட்யா
  • ஐபில் சிறந்த கேப்டன்களின் தரவரிசை
Captain Of IPL: ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள்! தோனி இல்லையா? title=

அகமதாபாத்: செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அணியின் கேப்டனாக தனது 15வது வெற்றியை பதிவு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை விட பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டன்களில் சிறந்த வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளார். இந்த படங்களின் தொகுப்பில், ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனைப் பார்ப்போம்.

ரிஷப் பந்த்
விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் டெல்லி கேபிடல்ஸ் அணியை 30 ஆட்டங்களில் வழிநடத்தி 17ல் 56.67 என்ற வெற்றி விகிதத்தில் வென்றுள்ளார்.

மேலும் படிக்க | CSKயில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனை பெற்ற கிரிக்கெட்டர்கள்

ஹர்திக் பாண்டியா
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ஆட்டங்களில் ஐபிஎல் கேப்டனாக தனது 15 வது போட்டியில் வெற்றி பெற்றார் மற்றும் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 75 சதவீத வெற்றி விகிதத்துடன் மிக வெற்றிகரமான கேப்டனாக உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஐபில் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை 51 ஆட்டங்களில் வழிநடத்தி, அதில் 30 ஆட்டங்களில் 58.82 என்ற வெற்றி-சதவீதத்துடன் வெற்றி பெற்றார், இது ஐபிஎல்லில் மூன்றாவது சிறந்ததாகும்.


 
ஸ்டீவ் ஸ்மித்
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் இந்தியன் பிரீமியர் லீக்கில் 43 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் மற்றும் 25 போட்டிகளில் 58.82 வெற்றி விகிதத்தில் வெற்றி பெற்றார், இது ஐபிஎல் வரலாற்றில் 4வது சிறந்ததாகும்.

எம்எஸ் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ். தோனி 217 போட்டிகளில் கேப்டனாக இருந்து, 128 வெற்றிகளுடன் 58.99 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது வெற்றிகரமான கேப்டன் ஆவார்.

அனில் கும்ப்ளே

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் 26 போட்டிகளில் தனது அணியை வழிநடத்தி 15ல் 57.69 என்ற வெற்றி விகிதத்தில் வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க | IPL 2023 Match 35: மும்பை இண்டியன்ஸை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News