MS Dhoni: புண்படுத்தாதீர்கள் தோனி... முன்னாள் இந்திய வீரர் மன்றாடல்!

MS Dhoni: தோனி தனது ரசிகர்களின் மனதை புண்படுத்தாமல், அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட வேண்டும் என மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2023, 10:52 PM IST
  • சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியை டெல்லியில் விளையாடுகிறது.
  • சேப்பாக்கத்தில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் போட்டிகள் நடைபெற உள்ளன.
  • சென்னை அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடியுள்ளது.
MS Dhoni: புண்படுத்தாதீர்கள் தோனி... முன்னாள் இந்திய வீரர் மன்றாடல்! title=

MS Dhoni: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது எனலாம். அனைத்து அணிகளும் ஏறத்தாழ 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. எனவே, தலா 2 லீக் போட்டிகள் மட்டுமே 10 அணிகளுக்கும் இருக்கும். 

பிளேஆப் சுற்று போட்டிகள்

சென்னை, ராஜஸ்தான், கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், சென்னை இன்று நடக்கும் போட்டி தான் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியாகும். இதன்பிறகு சென்னை சேப்பாக்கத்தில், பிளே ஆப் சுற்றின் குவாலிஃபயர் 1, எலிமினேட்டர் ஆகிய இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

கடைசி லீக் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளேஆப் ரேஸில் முன்னணியில் உள்ளது. மேலும், தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

மேலும் படிக்க | IPL 2023: ஆர்சிபிக்கு மிகப்பெரிய வெற்றி... 59 ரன்களுக்கு ராஜஸ்தான் ஆல்-அவுட்!

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி

லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், சென்னை - கொல்கத்தா போட்டிக்கு பின் சென்னை அணி நிர்வாகம் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என பலரும் கருதும் நிலையில், இன்றைய நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் தோனி அதுகுறித்து ஏதாவது கருத்து தெரிவிப்பாரா எனவும் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

காலத்தை நிறுத்திய தோனி

அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய மூத்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் சிஎஸ்கே வீரருமான ஹர்பஜன் சிங், தோனி தனது ரசிகர்களின் மனங்களை உடைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது," எம்எஸ் தோனி காலத்தை நிறுத்திவிட்டார். இப்போதும் பழைய தோனியைப் போலவே தோற்றமளிக்கிறார். அவர் அந்த பெரிய ஷாட்களை அடிக்கிறார், அந்த சிங்கிள்களை எடுக்கிறார். 

புண்படுத்தாதீர்கள், தோனி!

அவர் தனது முழு வேகத்தில் ஓடவில்லை என்றாலும், அவர் அந்த சிக்ஸர்களை நிதானமாக அடிக்கிறார், இன்னும் பேட் மூலம் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் ஆபத்தானவராக இருக்கிறார். எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள் தோனி, நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

'ரஹானே சிறந்த உதாரணம்'

"ஒரு வீரர் தனது கேரியரின் பின்பகுதியை நெருங்கும் போது நிறைய குரல்கள் எழுகின்றன. எம்.எஸ். தோனி இந்த சீசனில் அந்த குரல்களை அற்புதமாக அணைத்துவிட்டு தனது அணியை நிதானமாக வழிநடத்தினார். இதுவரை முதல் இரண்டு இடங்களுக்கான ரேஸில் சிஎஸ்கே அணியை தொடர உதவியிருக்கிறார். அவர் செய்த கள வியூகங்களும் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட உதவியது. அவர் போட்டியில் பல புத்திசாலித்தனமான நகர்வுகளை செய்தார். ஒரு நல்ல கேப்டனின் கீழ் ஒரு வீரர் தன்னை எப்படி புத்துயிர் பெறுகிறார் என்பதற்கு ரஹானே சிறந்த உதாரணம்" என்றார். 

சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த சிஎஸ்கே அணி 145 ரன்களை கொல்கத்தாவுக்கு இலக்காக நிர்ணயித்து, தற்போது பந்துவீசி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெறும் என கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | IPL 2023ல் வீசப்பட்ட 'விலையுயர்ந்த' ஓவர்கள்! தேவையா இது? கடிந்துக் கொள்ளும் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News