IPL 2023 DC vs MI: நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. நாட்டின் 12 நகரங்களில் நடைபெற்று வரும் இந்த தொடரில் தற்போது மொத்தம் 10 அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 16 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. வரும் மே 21ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில், நான்கு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. கடைசி நேரம் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடரில் தனது முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது. இந்த தொடரில், டெல்லி அணி இன்னும் தனது வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. விளையாடிய நான்கு போட்டிகளிலும் அந்த அணி படுதோல்வியடைந்துள்ளது.
Another result on the final ball of the game
An epic game to record @mipaltan's first win of the season
Scorecard https://t.co/6PWNXA2Lk6 #TATAIPL | #DCvMI pic.twitter.com/u3gfKP5BoC
— IndianPremierLeague (@IPL) April 11, 2023
நேற்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 173 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக அக்ஸர் படேல் 54 (25), டேவிட் வார்னர் 51 (47) ஆகியோர் ரன்களை எடுக்க, மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து, விளையாடி மும்பை அணிக்கு நீண்ட நாள் கழித்து ரோஹித் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து உறுதுணையாக நின்றார். ரோஹித் சர்மாவை அடுத்து இஷான் கிஷன் பொறுமையாக ஆடினாலும், திலக் வர்மா அதிரடியாக ரன்களை குவித்தார். மேலும், நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் டக்-அவுட்டாகி மீண்டும் ஏமாற்றமளித்தார். டிம் டேவிட், கேம்ரூன் ஆகியோர் கடைசி கட்டத்தில் ஆட்டத்தை முடித்துகொடுத்தனர்.
இந்த வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் அரைசதம் மிக பக்கபலமாக அமைந்தது. அவர் 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் என 65 ரன்களை குவித்தார். வெற்றி பெற்றது ஒருபுறம் இருக்க, இத்தனை நாளாக வைத்திருந்த மோசமான சாதனை ஒன்றுக்கு ரோஹித் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.
Leading from the front, the @ImRo45 way
The @mipaltan skipper becomes the Player of the Match after guiding his side to a six-wicket victory in Delhi
Scorecard https://t.co/6PWNXA2Lk6 #TATAIPL | #DCvMI pic.twitter.com/qR6K2r8vRX
— IndianPremierLeague (@IPL) April 11, 2023
அதாவது, ஐபிஎல் தொடரில் சுமார் 24 இன்னிங்ஸிற்கு பிறகு ஓப்பனராகிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்துள்ளார். இதுவரை இத்தனை இன்னிங்ஸாக தொடர்ந்து அரைசதம் அடிக்காத ஓப்பனர்கள் ஐபிஎல் வரலாற்றில் யாருமில்லை என கூறப்பட்டது. எனவே, நேற்றைய போட்டியில் தனது அரைசத தாகத்தை பூர்த்தி செய்தது மட்டுமின்றி தொடரில் அணிக்கு முதல் புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக, அரைசதம் அடித்தும் ரோஹித் அதனை கொண்டாடவில்லை.
2021ஆம் ஆண்டு, ஏப். 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது, ரோஹித் அரைசதம் அடித்திருந்தார். அதிலும், 53 பந்துகளில் 62 ரன்களை எடுத்து பொறுமையாக விளையாடியிருந்தார். அதன்பிறகு, தற்போது தான் ரோஹித் அரைசதம் அடிக்கவே இல்லை. அதாவது, கடந்த சீசனில் (2022) அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர் கடந்த சீசனில 14 போட்டிகளில் விளையாடி 268 ரன்களை எடுத்திருந்தார். சராசரி 19.14 மட்டுமே இருந்தது. ஒரு ஐபிஎல் சீசனில் அரைசதம் அடிக்காமல் இருந்தது, ரோஹித் சர்மாவுக்கு அதுவே முதல்முறையாகும். தற்போது, ரோஹித் மீண்டும் அரைசதம் அடித்ததை தொடர்ந்து, அவரின் ரசிகர்கள் 'நாயகன் மீண்டும் வரார்' என்ற ரேஞ்சுக்கு கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சென்னை அணிக்கு வரப்போகும் இலங்கை நட்சத்திரம்: விமானத்தில் புறப்பட்டாச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ