Ishan Kishan: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அடுத்த ஒரு வருட காலத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டுக்கு பரிசீலிக்கப்பட மாட்டார் என்று கூறப்படுகிறது. உலக கோப்பைக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் முதலில் இஷான் கிஷான் இடம் பிடித்தார். பின்னர் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், சிறிது நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என்று பிசிசிஐயிடம் கேட்டுக்கொண்டார். தென் ஆப்பிரிக்கா தொடர் முழுவதும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில், இந்த ஓய்வு அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்க துவக்க புள்ளியாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க | பும்ரா: புயலாக வீசிய பந்துகளில் மாலையாக வந்த சாதனைகள்.!
தற்போது அணி நிர்வாகம் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. பேட்டிங் மற்றும் நல்ல விக்கெட் கீப்பிங் செய்தாலும் உலக கோப்பையின் முதல் போட்டியை தவிர மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடவில்லை. முதலில் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, பின் அவரது செயல்களை கண்டு கோபமடைந்ததாக கூறப்படுகிறது. துபாயில் MS தோனியுடன் இஷான் சில பார்ட்டிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகு பிரபல வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதனால் இஷான் கிசான் மீது கோபம் கொண்ட பிசிசிஐ அடுத்தடுத்த தொடர்களில் அவரை சேர்க்கவில்லை.
Irony how ishan kishan patiently waited for a chance on the bench for one n half year which he didn't get but now everyone and their mamas are seeing the value of him as he is on break ..man came to a point where he needed mental break from all the trauma bcci made him go through
@coconut_codie) February 4, 2024
இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெறவில்லை. இந்நிலையில், பிரபல வீரர் அபிஷேக் திரிபாதி, தற்போதுள்ள பிசிசிஐ நிர்வாகிகள் இஷானின் கரியலில் அரசியல் செய்கின்றனர் என்றும், அவரை வேண்டுமென்றே அணியில் இருந்து விலக்கி வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். மேலும் பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி, இஷான் கிஷன் அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் பரிசீலிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளார்.
If bcci cared about form and performance ishan kishan would have played the WC in MO. And maybe he wouldn't have scored centuries in matches where seniors also did well. Maybe he'd make mistakes. But he'd not lose his head under pressure either if he was given a long run too. pic.twitter.com/N4plT1IqI7
— Sharan M. (@SharanM333902) February 4, 2024
மேலும் ஜார்கண்ட் அணிக்காக இஷான் கிஷன் சமீப காலமாக எந்த ஒரு ரஞ்சி கோப்பை போட்டியிலும் விளையாடவில்லை, அதுமட்டுமின்றி தொடர்ந்து ஐந்து ஆட்டங்களைத் தவறவிட்டுள்ளார். மேலும் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் மீதமுள்ள போட்டிகளுக்கு அவர் இருப்பாரா இல்லையா என்பது குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. இந்த செய்திகளுக்கு மத்தியில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷானுக்கும் பிசிசிஐ நிர்வாகத்துக்கும் இடையே எந்த ஒரு மோதலும் இல்லை என்றும், இவை அனைத்தும் பொய் சென்றும் மறுத்துள்ளார். இஷான் கிஷன் தற்போது ஓய்வில் இருக்கிறார் என்றும், இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன் சில உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் விளையாட வேண்டும் என்று டிராவிட் கூறியுள்ளார். 2024 இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இஷான் விளையாட உள்ளார். மேலும் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், அந்த தொடரில் இஷான் பங்கேற்பாரா என்பது தெளிவாக தெரியவில்லை.
மேலும் படிக்க | டபுள் செஞ்சுரிக்கு ஓடோடி வந்து பாராட்டிய சச்சின்..! யஷஸ்வி ரியாக்ஷன் இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ