ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 45-வது லீக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - புனே சிட்டி அணிகள் மோதின.

Last Updated : Nov 23, 2016, 11:05 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி title=

கவுகாத்தி: இந்தியன் சூப்பர் லீக் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த 45-வது லீக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - புனே சிட்டி அணிகள் மோதின.

81-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முட்டுக்கட்டையை ஒரு வழியாக தகர்த்தெறிந்தது. புனே வீரர் எடுர்டாவின் கையில் பந்து பட்டதால், கோல் பகுதி அருகே நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

பிரீ கிக் வாய்ப்பில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் வீரர் கோப்பி கிறிஸ்டியன் நிட்ரி பிரமாதமாக கோல் அடித்தார். முடிவில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. 6 ஆட்டங்களுக்கு பிறகு நார்த் ஈஸ்ட் யுனைடெட் சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் அரங்கேறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த முதலாவது லீக் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

Trending News