ஐஎஸ்எல் கால்பந்து: இன்று சென்னை - கோவா மோதல்

Last Updated : Oct 13, 2016, 02:10 PM IST
ஐஎஸ்எல் கால்பந்து: இன்று சென்னை - கோவா மோதல் title=

ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் ஆகும்.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இன்று இரவு நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணியும், எப்.சி.கோவா அணியும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அடுத்த 2-வது லீக் ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதேபோல கோவா அணி முதல் ஆட்டத்தில் கவுகாத்தி அணியிடமும், 2-வது ஆட்டத்தில் புனே அணியிடமும் தோல்வி கண்டது. 

வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் தீவிர முயற்சியை மேற்கொள்ளும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 

 

 

Trending News