Pro Kabbadi 2022 : சாம்பியன் ஆனது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பல்தன் பரிதாபம்

ப்ரோ கபடி தொடரின் இறுதிப்போட்டியில், புனேரி பல்தன் அணியை வீழ்த்தி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்த்ர்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 17, 2022, 09:56 PM IST
  • 2014ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
  • அதன்பின்னர் தற்போது 8 ஆண்டுகள் கழித்து ஜெய்ப்பூர் சாம்பியன் ஆகியுள்ளது.
  • புனே அணி இதுவரை சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.
Pro Kabbadi 2022 : சாம்பியன் ஆனது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - புனேரி பல்தன் பரிதாபம் title=

9ஆவது புரோ கபடி லீக் கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 12 அணிகள் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதியது. சுமார் 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு, ஜெய்ப்பூர் பின்க் பாந்த்ர்ஸ் அணியும், புனேரி பல்தன் அணியும் மோதியது. 

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இறுதிப்போட்டியில், இரு அணிகளும் சம அளவில் புள்ளிகளை குவித்து வந்தன. தொடர்ந்து, முதல் பாதி முடிந்த நிலையில், 14 - 11 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து ஜெய்ப்பூர் ஆட்ட நேர முடிவில் 33 - 29 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

மேலும் படிக்க | ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்

ஜெய்ப்பூர் அணி சார்பில் அர்ஜூன் தேஸ்வால், சுனில் குமார், அஜித் குமார் ஆகியோர் தலா 6 புள்ளிகளை பெற்றனர்.  புனே அணி தரப்பில் ஆதித்யா ஷிண்டே 5 புள்ளிகளையும், ஆகாஷ் ஷிண்டே, அபினேஷ் நடராஜன், இஸ்மாயில் ஆகியோர் தலா 4 புள்ளிகளை பெற்றனர். 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற புரோ கபடி தொடரின் முதல் சீசனில் ஜெய்ப்பூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதன்பின், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது சீசனின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, சுமார் 8 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக ஜெய்ப்பூர் கோப்பை தட்டித்தூக்கியுள்ளது. புனே அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என் துரதிஷ்டவசம் தற்போதும் தொடர்கிறது. 

மேலும் படிக்க | ஐபிஎல் அவருக்கு சரிப்பட்டு வராது - சொல்வது தினேஷ் கார்த்திக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News