ஜேம்ஸ் ஆண்டர்சன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 வருட ஜாம்பவான்! டெண்டுல்கர் சாதனை முறியடிப்பாரா?

இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 22வது ஆண்டுகளாக விளையாடும் கிரிக்கெட்டர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 2, 2024, 12:27 PM IST
  • விசாகப்பட்டன டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன்
  • 22வது ஆண்டாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார்
  • சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா?
ஜேம்ஸ் ஆண்டர்சன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 வருட ஜாம்பவான்! டெண்டுல்கர் சாதனை முறியடிப்பாரா? title=

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் தொடங்கியுள்ளது. இதில் பிளேயிங் லெவனில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கியுள்ளார் அந்த அணியின் மூத்த வீரரும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளருமான ஜேம்ஸ் ஆண்டர்சன். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் 22 வருடங்களாக தனது திறமையால் அனைவரையும் பிரமிக்க வைக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன், இன்று இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து 22 வருடங்கள் விளையாடும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

ஆண்டர்சன் - கிரிக்கெட்டின் ஒரு ஜாம்பவான்:

2003 ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்டர்சன், 690 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக 147 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதும் அவரது சாதனைகளில் ஒன்று. இவர் இப்போது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சச்சின் 25 ஆண்டுகள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

மேலும் படிக்க | Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது...' - பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!

டெண்டுல்கர் சாதனை முறியடிக்கப்படுமா?

25 ஆண்டுகளாக தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. அந்த வாய்ப்பு ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கும் இல்லை. ஏனென்றால் அவர் இப்போதே 40 வயதை கடந்துவிட்டார். ஃபிட்டாக இருந்தாலும் ஆண்டர்சனால் அந்த சாதனையை முறியடிக்க முடியாது. ஏனென்றால் அதற்காக அவர் இன்னும் 3 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாட வேண்டும். எதார்த்தமாக பார்த்தால் அந்த சாதனையை இன்னும்  சில தசாப்தங்கள் சச்சின் டெண்டுல்கர் வசமே இருக்கும். 

இந்திய அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சு

40 வயதைக் கடந்த நிலையிலும் விசாகப்பட்டனத்தில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். துல்லியமான லைனில் அடுத்தடுத்து பந்துவீசிக் கொண்டிருந்த அவருக்கு உடனடியாக விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் 5வது ஓவருக்கும் மேல் விக்கெட் கிடைத்தது. இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் விக்கெட்டை ஆண்டர்சன் கைப்பற்றினார். 

மேலும் படிக்க | Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா...? சகோதரர் அளித்த விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News