உலக கோப்பை கபடி: பைனலுக்கு இந்தியா தகுதி

Last Updated : Oct 22, 2016, 09:53 AM IST
உலக கோப்பை கபடி: பைனலுக்கு இந்தியா தகுதி title=

உலகக் கோப்பை கபடி அரையிறுதிப் போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்தி பைனலுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் 3_வது உலகக் கோப்பை கபடி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 12 நாடுகள் பங்கேற்றுள்ளன. அரையிறுதி போட்டியில் இந்தியா, தாய்லாந்து, ஈரான், தென்கொரியா ஆகிய நான்கு நாடுகள் தகுதி பெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் ஈரான் மற்றும் தென்கொரியா மோதின.இதில் தென்கொரிய அணியை 28-22 என்ற கணக்கில் ஈரான் அணி தோற்கடித்தது. 2-வது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் தாய்லாந்து அணி மோதியது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 73-20 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஈரான் அணிகள் மோதுகின்றன.

 

 

Trending News