இன்றைய போட்டியில் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் இடம்பெறுமா?...

IPL 2019 தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன!

Last Updated : Apr 12, 2019, 03:32 PM IST
இன்றைய போட்டியில் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் இடம்பெறுமா?... title=

IPL 2019 தொடரின் 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன!

IPL 2019 தொடரில் 26-வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்த ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 6-வது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

அதிரடி நாயகன் ஆன்ட்றிவ் ருஸ்ஸெல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா மீண்டும் இரண்டாவது முறையாக இத்தொடரில் இன்று மோதவுள்ளனர். வழக்கமாக கொல்கத்தா மைதானத்தில் மிகுந்த பலத்துடன் செயல்படும் கொல்கத்தா இன்றைய போட்டியில் டெல்லி அணியினை தும்சம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போட்டியில் IPL வரலாற்றிம் முதல் சூப்பர் ஓவர் இடம்பெற்றது. பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்போட்டி போன்று இன்றைய போட்டியும் அனைவரது கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய கொல்கத்தா அணியை பொருத்தவரையில் அணியில் எந்த மாற்றமும் இல்லை, சென்னை அணியும் பங்கேற்ற வீரர்களே இன்றைய போட்டியிலும் களமிறக்கப்படவுள்ளனர்.

டெல்லி அணியில் இருந்து காயம் காரணமாக ஓய்வு பெற்ற ஹர்சால் பட்டேல் எதிர்வரும் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டெல்லி அணி இன்றைய போட்டியில் 3 வேகபந்து வீச்சாளர்களை கொண்டு களம் காணும் என தெரிகிறது.

Trending News