மாஸ் காட்டிய கொல்கத்தா; 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவிப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL லீக் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : Mar 27, 2019, 09:51 PM IST
மாஸ் காட்டிய கொல்கத்தா; 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவிப்பு! title=

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL லீக் 6-வது போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது!

IPL 2019 தொடரின் 6-வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. 

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பஞ்சாப் அணி., மில்லர், வையில்ஜோன், வருண் சக்கிரவர்த்தி, ஆன்டிரிவ் டை அணியில் இடம்பெற்றுள்ளனர். பூரன், சாம் கர்ரண், அங்கித் ராஜ்பூட் மற்றும் முஜீப் உர் ரஹுமான் அணியில் இடம்பெறவில்லை. கொல்கத்தா அணியில் மாற்றம் இல்லை.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலிதில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் லெயன் 10(10), சுனில் நரேன் 24(9) ரன்களில் வெளியேறினர், எனினும் இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராபில் உத்தப்பா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67(50) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக நிதிஷ் ராணா 63(34), ஆன்டிரிவ் ரூஸ்வெல் 48(17) ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஆண்ட்ரூஸ் விஜிலியோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

Trending News