எந்த நேரத்திலும் வார்னரை அவுட் செய்ய முடியும்: குல்தீப்

Last Updated : Sep 21, 2017, 11:50 AM IST
எந்த நேரத்திலும் வார்னரை அவுட் செய்ய முடியும்: குல்தீப் title=

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்று பிற்பகல் நடக்க உள்ளது.

சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.

இந்நிலையில் இந்தப்போட்டி குறித்து குல்தீப் யாதவ் கூறியது:-

எனது பந்து வீச்சை எதிர்கொள்வதில் வார்னர் நெருக்கடியாக இருப்பதாக கருதுகிறேன். அவரை நான் அவுட் செய்து விடுவேன் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அவரை நான் மீண்டும் அவுட் செய்ய முயற்சிப்பேன்.

வார்னர் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை ஒட்டு மொத்தமாக மாற்றக்கூடியவர். ஆனால் அவரை எந்த நேரத்திலும் என்னால் அவுட் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Trending News