லோதா கமிட்டி: பிசிசிஐ நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

சுப்ரீம் கோர்ட்டில் இன்று லோதா கமிட்டி ஒரு பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது. 

Last Updated : Nov 21, 2016, 05:18 PM IST
லோதா கமிட்டி: பிசிசிஐ நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் title=

டெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் இன்று லோதா கமிட்டி ஒரு பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது. 

பிசிசிஐயில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஏற்பட்ட சூதாட்ட புகாரையடுத்து கிரிக்கெட் வாரியத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் சுப்ரீம் கோர்ட் கமிட்டி அமைத்தது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே, லோதா குழு தனது பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அதில், பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் தகுதிநீக்கம் செய்யவேண்டும். முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளையை பிசிசிஐ சிறப்பு பார்வையாளராக நியமிக்க வேண்டும் மேலும் அவருக்கு தணிக்கை, ஊழியர்கள் நியமன அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News