டாஸ் வென்ற ஹைதரபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு!

IPL 2019 தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைபெறுகிறது.

Last Updated : Apr 4, 2019, 07:35 PM IST
டாஸ் வென்ற ஹைதரபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு! title=

07:33 PM 04-04-2019

டாஸ் வென்ற ஹைதரபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!


IPL 2019 தொடரின் 16-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசஸ் ஹைதிராபாத் அணியும் மோதுகின்றன.

வலுவான பேட்டிங் வரிசை கொண்டுள்ள சன் ரைசஸ் ஹைதிராபாத் அணியை எதிர்கொள்ள போதுமான பேட்ஸ்மேன்கள் இன்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணி தினறி வருகின்றது. வழக்கமாக டெல்லி அணியில் 3-வது மற்றும் 4-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷாப் பன்ட் விளையாடுகின்றனர். எனினும் கடந்த போட்டிகளில் இருவருது கூட்டணியும் சரிவர அணிக்கு கைகொடுக்காததால் இன்றைய போட்டியில் இவர்களது பேட்டிங் ஆர்டர் மாற்றப்படலாம் என தெரிகிறது.

இன்றைய டெல்லி அணியை பொருத்தமட்டில் அவேஷ் கானுக்கு பதிலாக அக்சர் படேல் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைப்பெற்ற போட்டியில் சன் ரைசஸ் ஹைதிராபாத் அணி வீரர் டேவிட் வார்ணருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் இவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது, எனினும் டேவிட் வார்ணர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாவும், இன்றைய போட்டியில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைப்பெற்ற 4 போட்டிகளில் ஹைதிராபாத் அணி 3 போட்டிகளிலும், டெல்லி அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய  IPL 2019 தொடரின் புள்ளி பட்டியலை பொருத்தவரையில் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.

Trending News