IND vs WI: நன்றாக விளையாடியும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட வீரர்

நன்றாக விளையாடியபோதும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டார். கே.எல்.ராகுலுக்காக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன்பிறகும்கூட அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 26, 2023, 08:20 PM IST
  • மயங்க் அகர்வால் நீக்கம்
  • தேர்வாளர்கள் மீது அதிருப்தி
  • 2 இரட்டை சதம் விளாசியவர்
IND vs WI: நன்றாக விளையாடியும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட வீரர் title=

இந்திய அணியின் திறமையான கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தேர்வாளர்களால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் வருங்கால சூப்பர் ஸ்டாராக இருப்பார் என அவர் கருதப்பட்ட நிலையில் பிசிசிஐ தேர்வாளர்கள் அகர்வாலின் வாழ்க்கையை முடிவை நோக்கி தள்ளியுள்ளனர். கேஎல் ராகுல் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ராகுலுக்கு பதிலாக ஷுப்மான் கில் வந்துவிட்டதால் மயங்க் அகர்வாலின் இந்திய டெஸ்ட் அணிக்கான கனவு ஏறக்குறைய முடிவை நோக்கி நகர்ந்துவிட்டதாக கருதப்படுகிறது.

மயங்க் அகர்வாலுக்கு சோகம்

இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை தேர்வாளர்கள் மீண்டும் புறக்கணித்துள்ளனர். அடுத்த மாதம் ஜூலை 12 முதல் தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ராகுல் இடத்துக்கு சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் மயங்க் அகர்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மான் கில் இடம்பிடித்துள்ளார். மயங்க் அகர்வாலுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு அளிக்க கூட தேர்வாளர்கள் பரிசீலிக்கவில்லை. இதேபோல், இந்திய டெஸ்ட் அணியில் சேட்டேஷ்வர் புஜாராவை இப்போது புறக்கணித்துவிட்டு அவருக்கு பதிலாக ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

மேலும் படிக்க | 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வைரல் போட்டோ

தேர்வாளர்கள் மீது கடும் அதிருப்தி

அடுத்த மாதம் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மயங்க் அகர்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மயங்க் அகர்வால் ரஞ்சி டிராபி 2022-23 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரஞ்சி டிராபி 2022-23 சீசனில் அதிக ரன் குவித்தவர் மயங்க் அகர்வால். ரஞ்சி டிராபி 2022-23 சீசனில் கர்நாடகாவுக்காக விளையாடி, 9 போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் 82.50 சராசரியுடன் 990 ரன்கள் எடுத்தார். அதில் அவர் மூன்று சதங்கள் மற்றும் ஆறு அரை சதங்கள் அடித்தார். மயங்க் அகர்வாலின் சிறந்த ஸ்கோர் 249 ரன்கள், அவரது ஆட்டத்தால் கர்நாடகா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஒரு வருடமாக அணியில் இடம்பெறவில்லை

அதனால், இந்திய அணியில் இடம் பெற மிகவும் தகுதியானவர் மயங்க் அகர்வால். ஆனால், கடந்த 1 வருடமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் மயங்க் அகர்வால். அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்காக மார்ச் 2022-ல் இலங்கைக்கு எதிராக விளையாடினார. அதன் பின்னர் அவர் டீம் இந்திய அணியில் இடம்பெறவில்லை. மயங்க் அகர்வால் தனது முதல் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 இரட்டை சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் மயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார்.

மயங்க் அகர்வால் குறைந்த இன்னிங்ஸில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததன் அடிப்படையில் டான் பிராட்மேனை பின்னுக்கும் தள்ளியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டான் பிராட்மேன் 13 இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதம் அடித்துள்ளார். குறைவான இன்னிங்சில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த சாதனை இந்தியாவின் வினோத் காம்ப்ளியிடம் உள்ளது. வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதங்களை அடித்துள்ளார். மயங்க் அகர்வால் இந்தியாவுக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் 1488 ரன்கள் எடுத்துள்ளார். அதில் அவர் 2 இரட்டை சதங்கள், 4 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடித்துள்ளார்.

மேலும் படிக்க | 2023 Cricket World Cup: தலைமை பயிற்சியாளர் தோனி! பேட்டிங் பயிற்சியாளர் சச்சின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News