2022 Commonwealth Games: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார், சிங்கப்பூர் சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 25, 2022, 02:19 PM IST
  • ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிகளுக்கு தகுதி
  • பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய்
  • மீராபாய் சானுவின் ஒலிம்பிக் வெள்ளி, காமன்வெல்தில் தங்கமாக உயருமா?
2022 Commonwealth Games: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி title=

புதுடெல்லி: ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார், சிங்கப்பூர் சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் நட்சத்திரமான மீராபாய் சானு, சிங்கப்பூர் பளுதூக்குதல் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூர் சர்வதேச பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் மீராபாய். முதன்முறையாக 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட சானு 191 கிலோ (86 கிலோ+105 கிலோ) எடையை தூக்கி போட்டியில்லாத களத்தில் முதலிடம் பிடித்தார்.

இரண்டாவது இடத்தில் உள்ள லிஃப்டர் -- ஆஸ்திரேலியாவின் ஜெசிகா செவாஸ்டென்கோவின் சிறந்த முயற்சி 167 கிலோ (77 கிலோ+90 கிலோ), சானுவை விட 24 கிலோ குறைவாக இருந்தது.

மலேசியாவின் எல்லி கசாண்ட்ரா எங்லெபர்ட் 165 கிலோ (75 கிலோ+90 கிலோ) சிறந்த முயற்சியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

sports

ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற சானு, கலந்துக் கொண்ட முதல் போட்டி நிகழ்வு இதுவாகும்.

மேலும் படிக்க | Tokyo Olympics 2020: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

27 வயதான மீராபாய் சானு,ம் காமன்வெல்த் தரவரிசையின் அடிப்படையில் 49 கிலோ எடைப் பிரிவில் CWG க்கு தகுதி பெற்றுள்ளார்.

இருப்பினும், CWGயில் இந்தியா அதிக தங்கம் வெல்லும் வாய்ப்பை அதிகரிக்க, சானு புதிய 55 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பர்மிங்காமில் நடைபெறும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.  

மேலும் படிக்க | மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?

நடந்து வரும் போட்டியில் ஒவ்வொரு எடைப் பிரிவிலும் முதல் எட்டு இடத்தில் வருபவர்கர்ள், நேரடியாக 2022 காமன்வெல்த் போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.

ஒலிம்பிக்கில், மீராபாய் சானு, ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார்.

2000ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்றிருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது.

மேலும் படிக்க | சல்மான் கானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு

மேலும் படிக்க | ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானுவின் எளிமையால் நெகிழ்ந்த நடிகர் மாதவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News