ஐபிஎல் 2023 மினி ஏலத்தில், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரனை மீண்டும் அணியில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டு இருந்த நிலையில் எடுக்க முடியாமல் போனது. வெள்ளியன்று கொச்சியில் நடந்த ஏலத்தில் சாம் கரண் விலையுயர்ந்த வீரராக ஆனார். இருப்பினும் சிஎஸ்கே பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸை தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, தோனிக்கு பதிலாக ஸ்டோக்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்று நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாத் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் இணைந்தது குறித்து தோனியின் ரியாக்சனை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க | 17.50 கோடிகளை கொட்டி மும்பை இந்தியன்ஸ் தூக்கிய கேம்ரூன் கிரீன்! யார் இவர்?
சாம் கரன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் ஜேசன் ஹோல்டரையும் வாங்க முற்பட்டு சிஎஸ்கே தவறிய நிலையில், பென் ஸ்டோக்ஸ்ஸை ஐபிஎல் ஏலத்தில் மூன்றாவது அதிக விலை கொடுத்து வாங்கியது. 167 கோடி ரூபாய்க்கு 80 வீரர்கள் கொச்சியில் நடந்த ஏலத்தின் முடிவில் தெரிவித்தார். "ஸ்டோக்ஸைப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், இறுதியில் அவர் எங்கள் அணியில் கிடைத்ததில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.
அணியில் ஒரு ஆல்ரவுண்டர் தேவை, எங்களுக்கு ஸ்டோக்ஸ் கிடைத்ததில் தோனி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தற்போது சென்னை அணி பிரகாசமாகத் தெரிகிறது, இந்த சீசனில் நாங்கள் சிறப்பாக இருப்போம் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். ஐபிஎல் 2022 தொடங்குவதற்கு முன்பு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி, ரவீந்திர ஜடேஜாவை புதிய தலைவராக மாற்றினார். ஆனால் ஜடேஜா தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடவில்லை. இதனால் தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஐபிஎல் 2023க்கான சிஎஸ்கே அணி: தோனி (c), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்சு சேனாபதி, மொயீன் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.
மேலும் படிக்க | IPL 2023 Auction:'கப்பு' எங்களுக்கு தான்.. ஏலத்தை நிறைவு செய்த குஜராத் டைட்டன்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ