CSK IPL2023: சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி; நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னணி இதுதான்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி வழிநடத்துவார் என சிஎஸ்கே அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 4, 2022, 06:16 PM IST
CSK IPL2023: சிஎஸ்கேவுக்கு கேப்டன் தோனி; நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னணி இதுதான் title=

MS Dhoni Captaincy, IPL 2023: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அடுத்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த இருக்கிறார். கடந்த சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்த போதிலும், தொடரின் பிற்பகுதியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், சென்னை அணியை அடுத்த சீசனிலும் வழிநடத்துவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கேப்டன் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் தொடரின் வாகையை சூடியுள்ளது. 

கேப்டன் பொறுப்பில் மாற்றம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் எம்எஸ் தோனி கேப்டனாக இருந்து வந்தார். கடந்த சீசனில் ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், போட்டியின் முடிவுகளை தோனியே எடுத்து வந்தார். இதனால், யார் கேப்டன்? என்ற புகைச்சல் அணிக்குள் எழுந்ததாக கூறப்பட்டது. ஜடேஜாவின் பந்துவீச்சும் சரியாக அமையாததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார் அவர். இருப்பினும், சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

ஜடேஜாவுடன் சிக்கல்

இதனைத் தொடர்ந்து ஜடேஜா சென்னை அணியில் இருந்து விலகுவதாக தகவல் பரவியது. கடந்த ஐபிஎல் தொடர் முடிந்ததில் இருந்து அவர் சென்னை அணியுடன் தொடர்பில் இல்லை எனவும், அவர் குஜராத் அணிக்கு விளையாட விரும்புவதாகவும் தகவல் பரவியது. இதற்கு ஜடேஜா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தகவலை மறுத்தது. இருப்பினும், அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும்போதே ஜடேஜா சென்னை அணியில் இருக்கிறாரா? இல்லையா? என்பது அதிகாரப்பூர்வமாக தெரியும். 

மீண்டும் கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை கடந்த சீசனின் பிற்பகுதியில் தோனி மீண்டும் ஏற்றாலும், இந்த தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுமா? என்ற கேள்வி இருந்து வந்தது. அந்த கேள்வி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதனிடமும் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அடுத்த சீசனிலும் தோனியே சென்னை அணியை வழிநடத்துவார் எனக் கூறி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

மேலும் படிக்க | மீண்டும் மோதிக்கொள்ளும் இந்தியா பாகிஸ்தான்! ஆசிய கோப்பையில் சுவாரஸ்யம்!

மேலும் படிக்க | கே.எல். ராகுலை நீக்க சொல்கிறீர்களா?... பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட சூர்யகுமார் யாதவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Trending News