Neeraj Chopra Net Worth: ஹங்கேரி நாட்டின் புடாஃபெஸ்ட் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா முதல்முறையாக தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியரும் இவர்தான்.
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் நாட்டின் தங்கமகன் என்று அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா இரண்டாவது முயற்சியிலேயே 88.17 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை உறுதிசெய்தார். இறுதிப் போட்டியில் மொத்தம் ஆறு சுற்றுகள் நடந்தன.
முன்னதாக, ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவுக்காக முதல்முறையில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் நீரஜ் வெளிச்சத்திற்கு வந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு அவரது வாழ்க்கைமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது எனலாம். இன்று அவரது வீட்டில் பல விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இது தவிர, அவர் பல விலை உயர்ந்த பிராண்ட் ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்துள்ளார்.
மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவுக்கு வாசிம் ஜாபர் கொடுத்த முக்கியமான அட்வைஸ்
நீரஜ் சோப்ராவின் நிகர சொத்து மதிப்பு
ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்
நீரஜ் சோப்ரா சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை வாங்கி உள்ளார். இந்த சொகுசு எஸ்யூவியின் விலை ரூ.1.98 கோடி முதல் ரூ.2.22 கோடி வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த காரின் செயல்திறன் அபாரமானது. இது தவிர, ஈட்டி எறிதல் வீரர் நீரல் சோப்ராவிடம் ஒரு சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி உள்ளது, அதன் விலை ரூ.93 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆகும்.
பானிபட்டில் சொகுசு வீடு
ஹரியானா மாநிலம் பானிபட்டில் நீரஜ் சோப்ராவின் மூன்று மாடி சொகுசு வீடு உள்ளது. இது அவரது விலை உயர்ந்த சொத்துகளில் ஒன்றாகும். வீட்டில், அவர் இதுவரை தனது பதக்கங்கள் மற்றும் சாதனைகள் அனைத்தையும் காட்சிப்படுத்தி உள்ளார். அவரது இரு சக்கர வாகன சேகரிப்பில் மிகவும் விலை உயர்ந்த பைக் ஹார்லி டேவிட்சன் 1200 ரோட்ஸ்டர் ஆகும். இது ஒரு பிரீமியம் க்ரூஸர் பைக் ஆகும், இதன் விலை சுமார் ரூ. 11 லட்சம் ஆகும்.
விலை உயர்ந்த பிராண்ட் டீல்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு பல கோடி ரூபாய் மதிப்பிலான பிராண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் நீரஜ் சோப்ரா. இந்த பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் அவரது ஆரம்ப வருமானம் ரூ.2.5 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இந்த ஒப்பந்தங்களுக்குப் பிறகு, அவர் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலிக்கு அடுத்து பிராண்டிங் பட்டியலில் உள்ளார். நீரல் சோப்ரா தனது விலை உயர்ந்த கார்கள், பைக்குகள் மற்றும் சொத்துக்களுடன் சேர்ந்து பார்த்தால், அவரது நிகர மதிப்பு சுமார் ரூ.40 கோடி என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | பாபா கணிப்பு: இந்த முறை உலகக் கோப்பையை வெல்லும் அணி இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ