அழிந்து வரும் இனமாக மாறும் ஆப் ஸ்பின்னர்கள்! அஸ்வினுக்கு பிறகு யார்?

இன்றைய கிரிக்கெட் உலகில் ஆப் ஸ்பின்னர்களின் தேவை குறைந்து வருகிறது. அதிகமாக மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இடது கை ஆப் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Aug 24, 2024, 12:13 PM IST
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை எடுத்த அஸ்வின்.
  • தற்போது ஆப் ஸ்பின்னர்கள் குறைந்து வருகின்றனர்.
  • அதிகம் இடது கை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
அழிந்து வரும் இனமாக மாறும் ஆப் ஸ்பின்னர்கள்! அஸ்வினுக்கு பிறகு யார்? title=

தற்போது கிரிக்கெட்டின் தன்மை நாளுக்கு நாள் மாறி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகள் குறைந்து அதிகம் டி20 போட்டிகள் தான் நடைபெறுகிறது. ஒரு சில நாடுகளில் டி20 கிரிக்கெட்டையும் தாண்டி 100 பால் கிரிக்கெட்டும் பிரபலமடைந்து வருகின்றன. கிரிக்கெட்டின் தன்மை மாறியதும், ஆப் ஸ்பின்னர்களும் மாயமாகி வருகின்றனர். அழிந்து வரும் இனம் போல் தான் இன்றைய ஆப் ஸ்பின்னர்கள் உள்ளனர். முத்தையா முரளிதரன், ஹர்பஜன் சிங், சயீத் அஜ்மல், கிரேம் ஸ்வான் போன்ற ஆப் ஸ்பின்னர்கள் ஒரு காலத்தில் பேஸ்ட்மேன்களை நடுங்க வைத்தனர். ஒரே இன்னிங்ஸில் ஆப் ஸ்பின்னர்கள் 10 விக்கெட்களை எடுத்த காலமெல்லாம் இருந்தது. இப்போது திறமையான ஆப் ஸ்பின்னர்கள் என்றால் நாதன் லயன் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தான் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் நாதன் லயன் 530 விக்கெட்களும், அஸ்வின் 516 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

மேலும் படிக்க | IND vs BAN: இந்திய அணி ரெடி... அந்த ஒரு இடம் மட்டும் பிரச்னை - யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு?

இவர்களுக்கு அடுத்து இது போன்ற திறமையான ஆப் ஸ்பின்னர்கள் வருவது சந்தேகமே. இங்கிலாந்து அணியில் சமீபத்தில் இணைந்த ஷோயப் பஷீர் மட்டும் நம்பிக்கை தருகிறார். 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் அஷ்வின் மற்றும் லயனின் சாதனையை இனி வரும் காலத்தில் யாராலும் நெருங்க முடியாது. மொயின் அலி, தில்ருவான் பெரேரா, ரமேஷ் மெண்டிஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் ஷில்லிங்ஃபோர்ட், மார்க் கிரெய்க், ஜோ ரூட் போன்ற மற்ற ஆப் ஸ்பின்னர்கள் இருந்த போதிலும் இந்த இரண்டு பேரின் திறமைக்கு முன்பு நிற்க முடியவில்லை. வங்கதேசத்தை சேர்ந்த 26 வயதான மெஹிடி ஹசன் மிராஸ் தான் இவர்களின் சாதனையை தொட கூடிய ஒரே ஆப் ஸ்பின்னராக தற்போது இருக்கிறார். இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 

இப்போது பல பேட்ஸ்மேன்கள் இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவுட் ஆகின்றனர். இடது கை ஆஃப்-ஸ்பின்னர்களில் இந்தியாவில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் குறைந்தது 50 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். மற்ற பார்மெட்களை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. சில டெக்னீக மூலம் கூடுதல் பீல்டரை வைத்து விக்கெட்களை அவர்களால் எளிதாக எடுக்க முடியும். இன்றைய டி20 உலகில் கேப்டன்கள் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது ஆப் ஸ்பின்னர்களையும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை ஆப் ஸ்பின்னர்களையும் பந்து வீச அனுமதிப்பதில்லை. பேட்ஸ்மேன்கள் இவர்களின் பந்துகளை எளிதாக கணிக்க முடியும் என்பதால் இவ்வாறு செய்கின்றனர். எனவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை பந்துவீச்சாளர்களையும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு வலது கை பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு ஆஃப்-ஸ்பின்னரும் அஷ்வின் அல்லது லயனாக இருக்க முடியாது. ஆனாலும் திறமையான பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்கள் நிச்சயம் கிடைக்கும். தற்போது குல்தீப் யாதவ் போன்ற மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இடது கை ஆப் ஸ்பின்னர்களுக்கு அதிக தேவை இருக்கிறது. 2012ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது. அந்த வெற்றிக்கு மான்டி பனேசரின் பந்துவீச்சு முக்கிய காரணம். அப்போது இருந்து இந்தியாவிற்கும் வரும் வெளிநாட்டு அணிகள் மெதுவான பந்துவீச கூடிய இடது கை பந்துவீச்சாளர்களை அழைத்து வருகின்றனர். 

தற்போது மிட்செல் சான்ட்னர், அஜாஸ் படேல் மற்றும் கேசவ் மகாராஜ் போன்ற சில திறமையான இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களால் அவர்கள் நாட்டை தாண்டி இந்திய மண்ணில் அதிக விக்கெட்களை எடுக்க முடிகிறது. தற்போது அக்சர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறார். ஜடேஜாவைப் போல் சிறப்பாக பேட் செய்யும் திறன் அவரது வாய்ப்பை அதிகப்படுகிறது. அஷ்வினுக்கு அடுத்தபடியாக அவரது இடத்தை நிரப்ப வாஷிங்டன் சுந்தரால் மட்டுமே முடியும். ஒரு சில போட்டிகளால் சுந்தர் சிறப்பாக பேட்டிங்கும் செய்துள்ளார். இருப்பினும் ஆப் ஸ்பின்னர்கள் இனி தனி இடத்தை பிடிப்பது கடினமான விஷயமே.

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்! இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News