​ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி!

Last Updated : Aug 11, 2016, 05:14 PM IST
​ஒலிம்பிக் குத்துச்சண்டை: மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி! title=

குத்துச்சண்டை ஆடவர் 64 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மனோஜ் குமார், லித்வேனியாவின் எவல்டாஸ் பெட்ராஸ்காஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில், மனோஜ் குமார், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் பெட்ராஸ்காஸை தோற்கடித்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில், லித்வேனியாவின் பெட்ராஸ்காஸ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், அமெரிக்காவின் சார்லஸ் கான்வெல்லை எதிர்கொண்டார். 24 வயதான விகாஸ் கிருஷ்ணன் 3 ரவுண்டுகளின் முடிவில் 3-0 (29-28, 29-28, 29-28) என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

Trending News