பாக்.,-க்கு டாடா காட்டி Final-க்கு முன்னேறியது வங்கதேசம்!

ஆசிய கோப்பை சூப்பர் 4, கடைசிப்போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அபுதாபி மைதானத்தில் மோதின. இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

Last Updated : Sep 27, 2018, 11:57 AM IST
பாக்.,-க்கு டாடா காட்டி Final-க்கு முன்னேறியது வங்கதேசம்! title=

ஆசிய கோப்பை சூப்பர் 4, கடைசிப்போட்டியில் பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அபுதாபி மைதானத்தில் மோதின. இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி போட்டி வரும் 28 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அண ஏற்கனவே இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்தியாவை இறுதிப்போட்டியில் எதில்கொள்ளும் அணிக்கான போட்டி நேற்று நடைப்பெற்றது. பாக்கிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடேயே நடைப்பெற்ற இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லிடன் தாஸ் 6(16), சர்கார் 0(5) ரன்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றற முஷாப்பிர் ரஹீம் 99(116) மற்றும் மொகமது மிதுன் 60(84) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் ஆட்டத்தில் 48.5 வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணியால் 239 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. பாக்கிஸ்தான் தரப்பில் ஜூனைத் கான் 4 விக்கெட்டுகளை குவித்தார்.

இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்க இமாம் உல் ஹக் 83(105) ரன்கள் குவித்து அணியினை வலுப்படுத்தினால், எனினும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் விளையாடிய பாக்கிஸ்தான் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 2012 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வங்கதேச அணி தரப்பில் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை குவித்தார்.

இதனையடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள வங்கதேச அணி நாளைய இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

Trending News