14-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சுத் தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் அணியின் (Punjab Kings) துவக்க ஆட்டக்காரர்களாக கே .எல்.ராகுல் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் முதலில் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் கெயில், ராகுலுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ராகுல் 57 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் 180 என்ற ரன் இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 2 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியில் முதல் விக்கெட் தொடக்க வீரர் தேவ்தத் பட்டிக்கல் 6 ரன்களுக்கு க்ளீன் பௌல்ட் ஆனார். 6 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது.
ஆர்சிபி அணியில் 2வது விக்கெட் கேப்டன் கோலி 35 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். வந்த வேகத்தில் டக் அவுட்டாகி வெளியேறினார் மேக்ஸ்வெல். அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து ஹர்ப்ரீத் பிரார் அசத்தினார். 12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்தது.
அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் 3 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் மேலும் ஒரு விக்கெட் சரிந்து ராஜத் பட்டிடர் 31 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அப்போது வெற்றி 96 பெற இன்னும் 48 பந்துகளில் 36 ரன்கள் தேவையாக இருந்தது.
மிகவும் முக்கி திணறி விளையாடிய ஆரசிபி அணியில் மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. ராஜத் பட்டிடர் 31 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை சுமாராக விளையாடிய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR