விரைவில் இந்திய அணிக்கு டாட்டா காட்டும் டிராவிட்... அடுத்தது யார்?

இந்திய ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் விரைவில் தனது பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 29, 2022, 08:13 AM IST
  • டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெறுகிறது.
  • வெளிநாட்டு பயிற்சியாளரை தேர்வு செய்யும் முனைப்பில் பிசிசிஐ.
  • 2021ஆம் ஆண்டில் இருந்து ராகுல் டிராவிட் இந்திய ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றி வருகிறார்.
விரைவில் இந்திய அணிக்கு டாட்டா காட்டும் டிராவிட்... அடுத்தது யார்? title=

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில், தொடர்ந்து வீரர்களை மாற்றி மாற்றி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காததால்தான், தொடர்ச்சியான தோல்வியை ஐசிசி தொடர்களில் இந்தியா சந்தித்துள்ளது என கருத்துகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், தற்போது அவரது தலைமை பயிற்சியாளர் பொறுப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அந்த வகையில், பிசிசிஐ புதிய தலைமை பயிற்சியாளராக வெளிநாட்டவரை பணியமர்த்த திட்டமிட்டிருப்பதாகவும், இதனால், டிராவிட் விரைவில் தனது பொறுப்பில் இருந்து விலகுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள ஏதும் வரவில்லை. இதுகுறித்த அனைத்து முடிவுகளும் பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் கையில்தான் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 2k கிட் என நிரூபித்த பிரித்வி ஷா! அணியில் வாய்ப்பு கிடைக்காததால் செய்த காரியம்!

இந்த விவகாரம் குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது,"இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நாங்கள் பல வழிகளை ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டங்களில் ராகுல் கண்டிப்பாக உள்ளார். ஆனால் அவருக்கும் பணிச்சுமை உள்ளது. எங்களின் முழு கவனமும் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை நோக்கியே இருக்கிறது.

உலகக் கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே, வெளிப்படையான காரணங்களுக்காக, தற்போது டி20 மீது கவனம் செலுத்தப்படவில்லை. நிறைய விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இறுதி முடிவும் கிரிக்கெட் ஆலோசனைக்குழு மற்றும் தேர்வாளர்களிடமும் தான் உள்ளது. மேலும் இதற்கு சிறிது காலம் எடுக்கும்" என்றார்.

டி20 உலகக்கோப்பைக்கு பின், டிராவிட் பயிற்சியின் கீழ் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால்தான், 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் குறித்து தற்போதே அச்சங்கள் கிளம்பியுள்ளன. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை விளையாட உள்ளது. 

மேலும் படிக்க |  IND vs SL : உலகக்கோப்பைக்கு பிளான் போடும் பிசிசிஐ... முக்கிய வீரருக்காக பலியாகும் ரிஷப் பண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News