WTC Final 2023: இவங்க விளையாடிவிட்டால் இந்தியா வெற்றியை தடுக்க முடியாது - ரிக்கி பாண்டிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா சிறப்பாக விளையாடிவிட்டால், இந்திய அணியின் வெற்றியை ஆஸ்திரேலியாவால் தடுக்க முடியாது என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2023, 08:36 AM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
  • ஆஸ்திரேலிய அணிக்கு பாண்டிங் எச்சரிக்கை
  • விராட், புஜாரா விக்கெட் ரொம்ப முக்கியம்
WTC Final 2023: இவங்க விளையாடிவிட்டால் இந்தியா வெற்றியை தடுக்க முடியாது - ரிக்கி பாண்டிங் title=

ஐபிஎல் கொண்டாட்டம் முடிந்தவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீதான பார்வை கிரிக்கெட் ரசிகர்களுக்கு திரும்பியுள்ளது. டெஸ்ட் போட்டி தரவரிசை பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப்போட்டியில் மல்லுக்கட்ட இருக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்,  இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் சிறப்பாக விளையாடிவிட்டால், ஆஸ்திரேலிய அணியால் இந்திய அணி மகுடம் சூடுவதை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.   

புஜாரா ரெக்கார்டு 

புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மற்ற அணிகளைக் காட்டிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார். அந்த அணிக்கு எதிராக பல ரெக்கார்டுகளை வைத்திருக்கும் புஜாரா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முக்கிய பங்கு வகிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 டெஸ்டில் 2033 ரன்கள் மற்றும் ஐந்து சதங்களை அடித்துள்ளார். ஜூன் 7 ஆம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (WTC Final) சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி நல்ல பார்மிலும் இருக்கிறார்.

மேலும் படிக்க | MS Dhoni: தோனிக்கு முடிந்தது சர்ஜரி... இத்தனை மாதங்கள் ஓய்வு தேவையா?

விராட் கோலி பார்ம்

கடந்த சில மாதங்களாக விராட் கோலி மீண்டும் தரமான பார்முக்கு திரும்பியிருக்கிறார். ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் என அனைத்து பார்மேட்டுகளிலும் வழக்கமான ஆட்டத்தை வெளிபடுத்திக் கொண்டிருக்கும் அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாக பாண்டிங் கணித்துள்ளார். அண்மையில் ஐபிஎல் தொடரிலும் அற்புதமாக விராட் கோலி விளையாடியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எச்சரிக்கை

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்போது, ’கடந்த காலத்தில் ஆஸ்திரேலியா மைதானங்களிலேயே புஜாரா சிறப்பாக விளையாடி இருக்கிறார். இங்கிலாந்தில் நடக்கும் இந்த மைதானமும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தைப் போலவே இருக்கும். புஜாராவை முன்கூட்டியே அவுட்டாக்க வேண்டும். இது ஆஸ்திரேலிய அணியினருக்கும் தெரியும். கடந்த சில வாரங்களில், டி20 கிரிக்கெட்டில் விராட் தனது சிறந்த பார்முக்கு திரும்பியிருப்பதையும் ஆஸ்திரேலிய அணி அறியும். இதனால் எச்சரிக்கையாக இருப்பது ஆஸ்திரேலியாவுக்கு நல்லது. 

சுப்மான் கில் விக்கெட் முக்கியம்

ஐபிஎல் தொடரில் சுப்மான் கில்லும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய ஆட்டம் அனைத்து பார்மேட்டுகளிலும் மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர் ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்க இருக்கிறார். விரைவில் கில்லின் விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய வீரர்கள் முயற்சிப்பார்கள். இதற்காக பிரத்யேக திட்டத்தையும் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். 

முகமது ஷமி அச்சுறுத்தல்

இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் முகமது ஷமி ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலை அளிப்பார். பும்ரா இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பாசிட்டிவான விஷயமாக இருந்தாலும், புது பந்து, பழைய பந்து என இரண்டிலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவராக ஷமி இருக்கிறார். அதனால், அவரை எச்சரிக்கையாக ஆஸ்திரேலியா விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு இந்த ஜெர்ஸியாவது ராசியாக இருக்குமா? - அடிடாஸின் அசத்தல் டிசைன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News