ஷிகர் தவானுக்கு பதிலாக தற்காலிக மாற்று வீரராக ரிஷப் பன்ட் அணியில் சேர்ப்பு: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக அணியில் இளம் வீரர் ரிஷப் பன்ட் சேர்ப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 12, 2019, 02:55 PM IST
ஷிகர் தவானுக்கு பதிலாக தற்காலிக மாற்று வீரராக ரிஷப் பன்ட் அணியில் சேர்ப்பு: பிசிசிஐ title=

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடிய அவர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு அடிதளமிட்டார். மேலும் அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகும், அடுத்த மூன்று வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் போட்டிகளில் ஷிகர் தவான் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

ஜூன் மாதத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நியூசிலாந்து, பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெறும் போட்டிகளில் ஷிகர் தவான் இடம்பெற மாட்டார் என கூறப்பட்டது. 

இதுக்குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியது, கிரிக்கெட் போட்டியின் போது காயம் ஏற்பட்ட ஷிகர் தவான், பிசிசிஐயின் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். உலகக் கோப்பையை தொடரில் அவரை வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவரின் காயம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனக் கூறியுள்ளது. 

இதனையடுத்து ஷிகர் தவானுக்கு மாற்று வீரராக தற்காலிகமாக ரிஷப் பன்ட்-டை இங்கிலாந்து அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இவர் தான் மாற்று வீரர் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவிக்கும் பட்சத்தில், ஒருவேளை ஷிகர் தவான் குணமானால், அவர் மீண்டும் உலகக் கோப்பையை தொடரில் விளையாட முடியாது. அதனால் ரிஷப் பன்ட்-டை அதிகாரபூர்வ மாற்று வீரராக அறிவிக்கவிலை.

எதிர்வரும் போட்டிகளில் ரோகித் ஷர்மா-வுடன் KL ராகுல் துவக்க வீரராக களமிறங்குவார் எனவும், தினேஷ் கார்தி அல்லது விஜய் சங்கர் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களாக களமிறங்குவார் எனவும் தெரிகிறது.

Trending News