டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான ஆட்டம் விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலும் தொடர்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பெரிதாக விளையாடாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 14 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸிலாவது பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 17 ரன்களுக்கு ஆண்டர்சன் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியனுக்கு சென்றார். அவரின் மோசமான ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருப்பதால் ரோகித் சர்மா பேட்டிங் மீது விமர்சனம் எழத் தொடங்கியிருக்கிறது.
மேலும் படிக்க | 2024 டி20 உலக கோப்பை அட்டவணையில் திடீர் மாற்றங்களை செய்துள்ள ஐசிசி!
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. ஜெய்ஷ்வால் அபாரமாக விளையாடி 209 ரன்கள் குவித்தார். இதனையடுதது இங்கிலாந்து அணி களமிறங்கி 253 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்த ஸ்கோருடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் பெரிய ஸ்கோர் அடித்தால் அதிக ரன்கள் முன்னிலை பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக உள்ளது. ஆனால், அதற்கு ஏற்றார்போல் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டம் இருக்கவில்லை. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிக் கொண்டே இருக்கிறார். அவர் கடைசி நான்கு இன்னிங்ஸ்களிலும் 24, 39, 14, 17 என்ற சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஒரு கேப்டன் என்ற பொறுப்பில் ரோகித் சர்மா பேட்டிங் விளையாடுவதில்லை, அவருடைய இடத்தில் வெளியில் இருக்கும் இளம் வீரர்களுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம் என ரசிகர்கள் கொந்தளித்து பேசியுள்ளனர். ஒருநாள் மற்றும் 20 ஓவர் என எந்தவொரு தொடரிலும் ரோகித் சர்மா முக்கியமான போட்டிகளில் மட்டும் ஆட்டமிழந்து வெளியேறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளனர்.
மேலும் படிக்க | விராட் கோலி, அனுஷ்கா சர்மா சொல்லப்போகும் குட் நியூஸ் - டிவில்லியர்ஸ் சூசகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ