கேன் வில்லியம்சன் காலில் ஏற்பட்ட காயம், அவர் இந்தியாவில் விளையாடுவதை இந்த ஆண்டு முழுவதுமே தடை செய்துவிடுமோ என்ற அச்சம், அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவது கடினம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் டைட்டன்ஸ் கேன் வில்லியம்சன்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்கிய கேன் வில்லியம்சன், ஐபிஎல் 2023 தொடக்கப் போட்டியின் போது ஏற்பட்ட கால் காயம் அவரது உடற்தகுதிஐ கேள்விக்குறியாக்கிவிட்டது.
ஐபிஎல் 2023 முதல் போட்டியில் காயம்
வில்லியம்சன் ஐபிஎல் 2023 போட்டித் தொடரில் விளையாடும்போது ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து, நியூசிலாந்து திரும்பினார், அங்கு அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு காயம் ஏற்பட்ட வலது முழங்காலைச் சுற்றியுள்ள வீக்கம், அவரது காயத்தின் பிரச்சனையை அதிகரித்துவிட்டது தெரியவந்துள்ளது.
இது உலகக்கோப்பை ஆண்டு என்பதால் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி அவருக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும். இந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் கேட்ச் பிடிக்கும் போது காலில் காயம் ஏற்பட்ட காயம் நிலைமையை தலைகீழாக மாற்றிவிட்டது.
மேலும் படிக்க | கொல்கத்தா vs பெங்களூர்: மீண்டும் கோலி அசத்துவாரா? செக் வைக்க காத்திருக்கும் கேகேஆர்
முழங்காலில் வீக்கம்
கேன் வில்லியம்சனுக்கு ஏற்கனவே காலில் பிரச்சனை இருந்தது. இதனால் பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர், தற்போது தான் உடல் தகுதியை எட்டிய பிராகு, டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட தொடங்கினார்.
தற்போது கேன் வில்லியம்சனின் முழங்காலில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறைந்த பிறகே, அறுவை சிகிச்சை செய்ய முடியும் என அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துவிட்டனர்.
கேன் வில்லியம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை
இந்த எதிர்பாராத காயம், கேன் வில்லியம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து, கிரிக்கெட்டில் மீண்டும் புத்துணர்வுடன் வரமுடியும் என்றும், ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுவர நேரம் ஆகும் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன்
விரைவில் களத்திற்கு திரும்புவதற்கு சாத்தியமான எதையும் செய்ய உறுதியாக இருக்கிறார் கேன் வில்லியம்சன். ஆனால் காயம் ஏற்பட்ட நேரம், இத ஐபிஎல் போட்டிகளில் மட்டுமல்ல, உலகக் கோப்பைக்கும் கேன் வர முடியாது என்பது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் இல்லாமல் நியூசிலாந்து அணி, இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விளையாடிய 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
கேன் வில்லியம்சன் சாதனைகள்
161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன் 13 சதங்களும் சராசரியாக 47 ரன்களும் அடித்திருக்கிறார். வில்லியம்சன் கேப்டனாக இல்லை என்றால் அந்த பொறுப்புக்கு டாம் லாத்தம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | IPL 2023 RR vs PBKS: ஓப்பனரான அஸ்வின்... பட்லருக்கு என்ன ஆச்சு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ