SA vs WI Second T20: தென்னாப்பிரிக்காவில் மேற்கு இந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது இரு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடந்தது. செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
சார்லஸ் சாதனை சதம்
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியில், ஜான்சன் சார்லஸ் 11 சிக்ஸர், 10 பவுண்டரி என 46 பந்துகளில் 118 ரன்களை எடுத்து சாதனை சதத்தை அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதமாக இது பதிவானது. அதாவது, 39 பந்தில் சதம் அடித்து ஜான்சன் மிரட்டியிருந்தார். இதற்குமுன், இதே மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ் கெயில் 47 பந்துகளில் சதம் அடித்ததுதான் டி20 போட்டிகளில் சாதனையாக இருந்தது. மேலும், கையில் மேயர்ஸின் அதிரடி அரைசதம், ரோமாரியோ ஷெப்பர்டின் இறுதிநேர அதிரடி என மொத்தம் 258 ரன்கள் குவிக்கப்பட்டது.
இதனால், 259 என்ற இமாலாய இலக்குடன் தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. ஆனால், அந்த அணியின் குவின்டன் டி காக் அந்த இலக்கை துச்சமாக நினைத்ததுபோல் விளையாடினார். அவரும் ரீஸா ஹெண்டிரிக்சும் அமைத்த பார்ட்னர்ஷிப்பில், வெறும் 10.5 ஓவரில் 152 ரன்களை குவித்தனர். அதில், டி காக் 44 பந்துகளில் 100 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஹெண்டரிக்ஸ் 68 ரன்களை அடித்தார். இருப்பினும், ஆட்டம் கடைசிவரை யார் பக்கம் திரும்பும் என்ற நிலையே இருந்தது.
RESULT | SOUTH AFRICA WIN BY 6 WICKETS
Records were broken as Quinton de Kock's maiden T20I century set the #Proteas on their way to chasing down a mammoth 259-run target - with 7 balls remaining - to level the KFC T20I series#SAvWI #BePartOfIt pic.twitter.com/XMJnBL6p5r
— Proteas Men (@ProteasMenCSA) March 26, 2023
7 பந்துகள் மீதம்
அடுத்தடுத்து, விக்கெட் விழுந்தாலும், மார்க்ரம் ஒருபுறம் நின்று அதிரடி காட்டி தென்னாப்பிரிக்காவை இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். இதன்மூலம், வெறும் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. 259 ரன்கள் இலக்கை எட்டியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா பெற்றது. தென்னாப்பிரிக்கா சார்பில் டி காக் 8 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் உள்பட 44 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்தார். இந்த தொடர், தற்போது 1-1 என்ற ரீதியில் டிராவாகி உள்ள நிலையில், அடுத்த போட்டி நாளை மறுதினம் (மார்ச் 28) நடைபெறுகிறது.
மேலும் படிக்க | IPL 2023: காயத்தால் ஐபிஎல் தொடரை தவறவிடும் வீரர்கள்... இதோ முழு லிஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ