ரன்கள் அடிக்க சிரமப்படும் சஞ்சு சாம்சன்! கேப்டன்சி பிரசர் காரணமா?

கடவுள் கொடுத்த திறமை வீணாக போகிறது,  சஞ்சு சாம்சன் இந்திய அணியில்  நீடித்து இருக்க ஷாட் தேர்வில் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Sep 24, 2021, 09:15 AM IST
ரன்கள் அடிக்க சிரமப்படும் சஞ்சு சாம்சன்! கேப்டன்சி பிரசர் காரணமா?  title=

IPLல் 2021: கடந்த செவ்வாய்க்கிழமை துபாய்யில் நடைபெற்ற  பஞ்சாப் கிங்ஸ் (PBKS) க்கு எதிரான ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ்(RR) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மீண்டும் ரன்கள் அடிக்க  தவறினார். இந்த போட்டியில் 185 ரன்கள் டார்கெட் ஆக இருந்த நிலையில் சாம்சன் ஐந்து பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.   கிட்டத்தட்ட போட்டி கை நழுவி போனது.  வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகியின் சிறப்பான பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தப் போட்டியில் வென்றது.   கடைசி ஒரு ஓவரில் நிக்கோலஸ் பூரன் மற்றும் தீபக் ஹூடா ஆகியோரது  விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

tyagi

இந்தப் போட்டி குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,  சாம்சன் இந்தியாவுக்கான வழக்கமான வீரராக இருக்க வேண்டுமெனில் தனது ஷாட் தேர்வில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார். 26 வயதான அவர் 2015 இல் இந்தியாவிற்கு அறிமுகமானார், ஆனால் அதன் பின் இந்திய அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 10 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

sanju

ஐபிஎல்லில் கூட, சாம்சன் பல சமயங்களில் சிறப்பாகவும் மோசமாகவும் ஆடியுள்ளார்.  ஐபிஎல் இல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் சாம்சன் இந்திய அணியில் இரண்டாவது அல்லது மூன்றாவது வீரராக களம் இறங்குகிறார்.  மேலும் அவர் முதல் பந்தை சிக்ஸர் அடிக்க  பார்க்கிறார். இது எல்லா போட்டிகளிலும் சாத்தியமற்றது.  இந்தப் போக்கை சாம்சங் விரைவில் மாற்றி கடவுள் கொடுத்த என்று திறமையை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மேலும் தொடர்ந்து இந்திய அணிக்காக அவர் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறினார்.

ஐபிஎல் 2021 இல் ஏற்கனவே சதம் அடித்து இருந்தாலும், எட்டு ஆட்டங்களில் 281 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பந்தயத்தில் சாம்சன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ 'பேட்ஸ்மேன்கள்' இனி 'பேட்டர்கள்' என்று மட்டுமே அழைக்கப்படுவர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News