ஃபாலி எஸ்.நாரிமனுக்கு பதிலாக அனில் திவான்- சுப்ரீம் கோர்ட்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட ஃபாலி எஸ். நாரிமனுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவான் என்பவரை நியமித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Jan 3, 2017, 12:32 PM IST
ஃபாலி எஸ்.நாரிமனுக்கு பதிலாக அனில் திவான்- சுப்ரீம் கோர்ட் title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட ஃபாலி எஸ். நாரிமனுக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் அனில் திவான் என்பவரை நியமித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

லோதா கமிட்டியின் பரிந்துரைகளின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

கோர்ட்டின் உத்தரவை பின்பற்றத் தவறிய முன்னிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கியது.

மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனை நியமித்தும் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்க ஃபாலி எஸ். நாரிமனை மறுத்து விட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில், ஃபாலி எஸ். நாரிமனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மூத்த வழக்கறிஞர் அனில் திவான் என்பவருக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

Trending News