ஷிகர் தவான்: 500 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில்..!

Shikhar Dhawan: இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஷிகர் தவான் 500 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 5, 2024, 07:36 PM IST
  • மீண்டும் இந்திய அணியில் ஷிகர் தவான்
  • 500 நாட்களுக்குப் பிறகு அழைக்கிறது பிசிசிஐ
  • ஆப்கானிஸ்தான் தொடருக்கு விளையாட இருப்பதாக தகவல்
ஷிகர் தவான்: 500 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில்..! title=

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால் சுமார் 500 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் அங்கம் வகிக்க இருக்கிறார். அவரை அஃப்கானிஸ்தான் டி20 தொடருக்காக பிசிசிஐ அழைத்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் இதுவாகும்.

தவான் 500 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில்..!

ஷிகர் தவான் கடந்த 2022-ல் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன்பிறகு அவர் இந்திய அணியில் இருந்து எந்தவொரு போட்டியிலும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், அஃப்கானிஸ்தான் தொடருக்காக அவரை அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வந்தது. இறுதியாக, அவரை அணியில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | IND vs SA: சிறப்பாக விளையாடியது யார்... சொதப்பியது யார்? - இந்திய அணியின் ரிப்போர்ட் கார்டு

டி20 உலகக் கோப்பைக்கு முன் தவானின் வருகை

தவான் இந்திய அணியின் முக்கியமான வீரர். அவர் ஒரு அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன். தவானின் பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்துள்ளது. இருப்பினும் இளம் வீரர்களின் வருகையால் அவரின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியானது. இப்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

தவானின் வருகை இந்திய அணிக்கு பலம்

டி20 உலகக் கோப்பைக்கு முன் தவான் அணியில் இணைவதால், இந்திய அணியின் வலிமை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவான் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பிசிசிஐ அறிவிப்பு விரைவில்

இருப்பினும் இது உறுதிபடுத்தபடாத தகவல் தான். பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. தவானை மீண்டும் 20 ஓவர் அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தவானுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.

இந்தியா vs அஃப்கானிஸ்தான் தொடர்

இந்திய அணி 11 ஜனவரி முதல் அஃப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விளையாட உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி தொடர் ஆகும்.

மேலும் படிக்க | Team India: இந்தியா இன்னும் வெற்றிபெறாத 6 டெஸ்ட் மைதானங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News