சாஹல் மனைவியுடன் சுற்றுகிறாரா இந்த இந்திய வீரர் - பார்ட்டி புகைப்படத்தால் சர்ச்சை !

Dhanashree Verma Viral Photo: இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவி தனஸ்ரீ பங்கேற்ற இஃப்தார் பார்டியில், மற்றொரு இந்திய வீரரும் இருந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 9, 2023, 05:41 PM IST
  • சாஹல் - தனஸ்ரீ தம்பதி 2020இல் திருமணம் மேற்கொண்டனர்.
  • இருவருக்கும் இடையில் ஏற்கெனவே பிரச்னை இருப்பதாக வதந்தி பரவியது.
சாஹல் மனைவியுடன் சுற்றுகிறாரா இந்த இந்திய வீரர் - பார்ட்டி புகைப்படத்தால் சர்ச்சை ! title=

Dhanashree Verma Viral Photo: நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் முழுமையாக விலகியிருந்தார். இதனால், அவர் மீதான வெளிச்சம் தற்போது குறைந்திருந்தது. ஆனால், அவர் இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தால் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். 

என்ன பார்ட்டி?

சாஹலின் மனைவி தனஷஸ்ரீ, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அவர்களின் பொதுவான நண்பரின் இடத்தில் மாஃபியா விளையாட்டை (Mafia Game) விளையாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருவதால், சாஹலை அங்கு பார்க்க முடியவில்லை. எனவேதான், ஷ்ரேயஸ் மற்றும் தனாஸ்ரீயின் புகைப்படம் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இந்த புகைப்படம் குறித்து ஒரு ட்விட்டர் பயனர்,"அது ஷ்ரேயஸ் ஐயருடைய காதலியின் வீடு. ஆஷ்னா டி என்பவர் ஷ்ரேயாஸின் காதலி. ஆஷ்னா வீட்டில் இப்தார் விருந்து. அவர் ஒரு தோல் மருத்துவர், தனஸ்ரீ ஒரு பல் மருத்துவர், அதனால் அவர்களுக்கு ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும். இதுபோன்ற தேவையற்ற வதந்தியை உடனே நிறுத்துங்கள்" என குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த தகவலும் உறுதிச்செய்யப்படவில்லை.

யுஸ்வேந்திர சாஹலுக்கு சிக்கலா?

ஸ்ரேயாஸ் ஐயரும், தனஸ்ரீயும் இதுபோன்று பொது நிகழ்வுகளில் ஒன்றாக கலந்துகொள்வது இது முதல் முறையல்ல. மேலும், சமீபத்தில் நடந்த ஷர்துல் தாக்கூரின் திருமணத்தின் போது, தாக்கூர், ரோஹித் ஷர்மா, ரோஹித் சர்மாவின் மனைவி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படத்தில் தனஸ்ரீயும் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படத்தை தனஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்தார். அப்போதே நெட்டிசன்கள் சாஹலைச் சுற்றி கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shreyas Iyer (@shreyas41)

மேலும் படிக்க | IPL 2023: ஒரே நாளில் 3 பேரிடம் அடுத்தடுத்து மாறிய ஆரஞ்சு தொப்பி

2021இல் தனஸ்ரீயுடன் நடனமாடும் வீடியோவை ஷ்ரேயஸ் பதிவேற்றியிருந்தார். ஆனால், 2020இல் சாஹல் தனஸ்ரீயை திருமணமானது. மேலும், கடந்த ஆண்டு சஹால் - தனஸ்ரீ ஜோடிக்கு இடையே பிரச்னை என்று வதந்திகள் பரவின. இருப்பினும், தாங்கள் மகிழ்ச்சியாக திருமண வாழ்வை மேற்கொண்டுவதாக கூறி சஹால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன்பின்னர், சஹால் - தனஸ்ரீ மாலத்தீவுக்கு சுற்றுலாவும் சென்றனர்.

4 மாதங்கள் ஓய்வு

நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார். அவர் இப்போது லண்டனில் அவரது முதுகில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளார். மேலும், மூன்று முதல் நான்கு மாதங்கள் ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அவர் விலகியதை அடுத்து, நிதிஷ் ராணா கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். 

அதே நேரத்தில் ஹனுமா விஹாரி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப் போட்டியில் தனது டெஸ்ட் கம்பேக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | CSKvsMI: ரோகித்துக்கு பாடம் கற்பித்த தோனி - மும்பையில் சம்பவம் செய்த சிஎஸ்கே..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News